162 கிராமில் ஸ்னாப்டிராகன் 8 எலைட், டூயல் சிம், 6.6-இன்ச் டிஸ்பிளே, 200MP கேமரா.. Samsung-ன் புதிய Slim மாடல்!
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரிஸின் கீழ் நான்காவது மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போன் ஆகும். இது மிகவும் ஸ்லிம் ஆன மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் பிரீமியம் அம்சங்களை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸை போல இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுமா என்கிற சந்தேகத்தை தீர்க்கும் படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது பிஐஎஸ் சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது.

பிஐஎஸ் என்பது இந்திய தர நிர்ணய ஆணையம் ஆகும். பொதுவாக பிஐஎஸ் தளத்தை கடந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் உடனடி அறிமுகத்தை காண்பது வழக்கம். சாம்சங்கின் புதிய எட்ஜ் மாடல் ஆனது SM-S937B/DS என்கிற மாடல் நம்பரின் கீழ் பிஐஎஸ் தளத்தில் காணப்பட்டுள்ளது. ஆக இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்திய சந்தையில் (ஏப்ரல் மாத வாக்கில்) அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- டூயல் சிம் ஆதரவு
- 5.84 மிமீ தடிமன்
- சுமார் 162 கிராம் எடை
- 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 6.6-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 3,900mAh பேட்டரி
- 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- விலை சுமார் ரூ.80,000 - ரூ,90,000 க்குள் இருக்கலாம்
இதுவொருபக்கம் இருக்க சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகம் செய்து, கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு பிறகு கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) மாடலுக்கான புதிய கலர் ஆப்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கான ஒரு புதிய டார்க் கலர் ஆப்ஷனை (New Dark Color Option) உருவாக்கி வருவதாக, எக்ஸ் தளம் வழியாக டீஸ் செய்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் தென் கொரிய தொழில்நுட்ப சாம்சங், பளபளப்பான தோற்றம் மற்றும் கருப்பு வண்ணத்திலான தயாரிப்புகளின் தொகுப்பை ஷேர் செய்துள்ளது. மேலும் "சிறிது புதிய பாணியை தழுவ தயாராகுங்கள்!" என்றும் குறிப்பிட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே கேலக்ஸ் எஸ்25 அல்ட்ராவை டைட்டானியம் பிளாக் கலர் ஆப்ஷனில் விற்பனை செய்கிறது. ஆகையால் வரவிருக்கும் புதிய டார்க் கலர் ஆப்ஷன் ஆனது இன்னும் டார்க் ஆன பிளாக் கலரையும் மற்றும் பேக் பேனலில் பளபளப்பான பினிஷை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் சில்வர், டைட்டானியம் கிரே, டைட்டானியம் சில்வர் ப்ளூ, டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஜேட் கிரீன், டைட்டானியம் பிங்க் கோல்ட் மற்றும் டைட்டானியம் வைட் சில்வர் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டு, வாங்க கிடைக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, எஸ்25 அல்ட்ராவின் இந்த புதிய டார்க் கலர் ஆப்ஷன் எப்படி இருக்கும் அல்லது இது எப்படி அழைக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் விரைவில் மேலும் பல புதிய டீஸர்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி - புதிய கலர் ஆப்ஷனை தவிர்த்து எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது.


Click it and Unblock the Notifications








