Home
Mobile

வரலாற்று விலை குறைப்பில் Samsung ஸ்லிம் 5ஜி போன்.. ரூ.50000 Price Cut + ரூ.3000 Bank Offer.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மாட்போன் ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடலானது கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா உட்பட உலகின் சில முக்கிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது முன் எப்போதும் இல்லாத அளவிலான, மிக குறைத்த விலையில் வாங்க கிடைக்கிறது.

வெறும் 5.8 மிமீ தடிமன் மற்றும் சுமார் 163 கிராம் எடை கொண்ட இந்த போன், ஆப்பிளின் ஐபோன் ஏர் மாடலுக்கு போட்டியாக அமையும் வகையில், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் மிக மெல்லிய மற்றும் எடை குறைந்த கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனாக விளங்குகிறது. இந்தியாவில் அறிமுகமாகி ஓராண்டுக்கும் மேலான நிலையில், கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது இப்போது அதன் அறிமுக விலையை விட மிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

வரலாற்று விலை குறைப்பில் Samsung ஸ்லிம் 5ஜி போன்!

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் ரூ.59,999 என்ற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இதேபோல 512GB ஆப்ஷன் ரூ.71,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை Titanium Jetblack மற்றும் Titanium Silver ஆகிய 2 கலர் ஆப்ஷன்களுக்கும் பொருந்தும்.

இதற்கு மேலாக, பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 உடனடி தள்ளுபடியையும் பெறலாம், இது எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கிறது. இதுவே - இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானதிலிருந்து மிக குறைந்த விலை ஆகும்.

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் மே 2025-இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், ஹை எண்ட் ஆப்ஷன் ரூ.1,21,999 க்கும் விற்கப்பட்டது. தற்போதுள்ள நேரடி விலை குறைப்பு, அறிமுக விலையுடன் ஒப்பிடுகையில் இரண்டு மாடல்களிலும் ரூ.50,000 வரையிலான குறிப்பிடத்தக்க தள்ளுபடியை குறிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.

சாஃப்ட்வேர்-ஐ பொறுத்தவரை இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Edge Slim and Light Weight Smartphone Selling At All time Low Price in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X