Home
Mobile

பார்த்ததும் ஆடி போய்டோம்.. மே 13 அறிமுகத்திற்கு முன்பாகவே Samsung Galaxy S25 Edge விலை லீக்!

சாம்சங் நிறுவனம் வருகிற மே 13 ஆம் தேதி அன்று அதன் "ஸ்லிம் போன்" ஆன கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாரக உள்ளது. இது மே 23 ஆம் தேதிக்குள் சீனா மற்றும் கொரியாவில் வாங்க கிடைக்கும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. பின்னர் மே 30 ஆம் தேதி முதல் மற்ற சந்தைகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மே 13 ஆம் தேதி அன்று நடக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்களோடு சேர்த்து இந்த ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

மே 13 அறிமுகத்திற்கு முன்பாகவே Samsung Galaxy S25 Edge விலை லீக்!

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் (லீக் ஆன) அம்சங்கள்:
- 3120 × 1440 ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே
- டிஸ்பிளேவின் கீழே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 12ஜிபி ரேம்
- 256ஜிபி அல்லது 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் உடனான 200எம்பி ப்ரைமரி கேமரா
- இது எஸ்25 அல்ட்ரா மாடலில் காணப்படும் அதே 1/1.3-இன்ச் யூனிட் ஆகும், இது உயர்தர 2x ஜூம் ஷாட்களை வழங்கும் திறன் கொண்டது.

- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 12எம்பி அல்ட்ரா-வைட் சென்சார்
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 12எம்பி செல்பீ கேமரா
- இது 1/3.2-இன்ச் S5K3LU சென்சாரை பயன்படுத்துகிறது
- 5.85 மிமீ ஸ்லிம் டைட்டானியம் பிரேம்
- பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2
- முன்பக்கம் கொரில்லா கிளாஸ் செராமிக் 2

- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 7
- ப்ளூடூத் 5.4
- வைஃபை 7

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் (லீக் ஆன) விலை விவரங்கள்: வின்பியூச்சர் (WinFuture) படி, இந்த ஸ்மார்ட்போனின் 256ஜிபி மாடலின் விலை €1,249 ஆக (தோராயமாக ரூ. 1,19,606) இருக்கலாம். மறுகையில் உள்ள 512ஜிபி ஆப்ஷன் €1,369 க்கு (தோராயமாக ரூ.1,31,098) அறிமுகம் செய்யப்படலாம்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஐசி ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் உள்ளிட்ட பல கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி முதலில் கொரியா மற்றும் சீனாவில் அறிமுகமாகும்; அதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும்.

சாம்சங் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட சாம்சங்கின் ஒன் யுஐ 7 அப்டேட் ஆனது சமீபத்தில் கேலக்ஸி எஸ்23 சீரிஸில் வெளியானது. இந்த அப்டேட்டை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த சில பயனர்கள், தங்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக அளவில் பேட்டரி ட்ரெயின் ஆவதாகாக புகாரளித்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட யுஐ மற்றும் ஆடியோ ஏரேசர் போன்ற கேலக்ஸி ஏஐ அம்சங்களால் நிரம்பிய சாம்சங்கின் ஒன் யுஐ 7 அப்டேட் ஆனது ஆரம்பத்திலேயே ஒரு பக் (Bug) பிரச்சனையில் சிக்கியதும்; அதை தொடர்ந்து லேட்டஸ்ட் அப்டேட் சிறிது காலம் இடைநிறுத்தப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் - சாம்சங் ​​கேலக்ஸி எஸ்23, சாம்சங் ​​கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் சாம்சங் ​​கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா - ஸ்மார்ட்போன்களில் பேட்டரி லைஃப் சிக்கலை கொண்டுவந்துள்ளது, சாம்சங் பயனர்களை கவலையடைய செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Edge Price Full Specifications Leaked Ahead Launch on May 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X