ஏப்ரல் 2025.. வெயிட் பண்ணா லைஃப் டைம் செட்டில்மென்ட்.. அதே விலைக்கு Samsung-ன் புதிய அல்ட்ரா ஸ்லிம் போன்!
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் இன்னொரு பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போன் ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை (Samsung Galaxy S25 Edge Price) விவரங்கள், டிஸ்பிளே அளவு மற்றும் எடை குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் என்ன விலைக்கு வரும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? சாம்சங் நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போனாக வரும் என்று எதிர்பார்க்கப்படும் இதன் எடை எவ்வளவு இருக்கும்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் என்ன விலைக்கு வரும்? டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (@UniverseIce) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, இதன் விலை 2025 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலை போலவே இருக்கும். இந்த கூற்று துல்லியமாக இருந்தால், கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது $999 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.87,150 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் என்னென்ன அம்சங்களை (Samsung Galaxy S25 Edge Specifications) பேக் செய்யும்? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 6.65 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் உள்ள அதே 6.7 இன்ச் டிஸ்ப்ளேவை பேக் செய்யும் என்பது போல் தெரிகிறது
இருப்பினும், வரவிருக்கும் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் வேரியண்ட் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலை போலவே குறுகிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் குறிப்பிட்டுள்ளார். அளவு மற்றும் எடையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஆனது 5.84 மிமீ தடிமனாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலுடன் ஒப்பிடும்போது 1.46 மிமீ வேறுபாடு வேறுபாடு உள்ளது..
மேலும் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 162 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார், இது பிளஸ் வேரியண்டின் 195 கிராம் எடையை விட மிகவும் குறைவாகும். இந்த இடத்தில், வரவிருக்கும் எட்ஜ் மாடல் ஆனது கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் உள்ளதை விட சிறிய அளவிலான பேட்டரியுடன் வரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
மேலும் இதில் பிளஸ் வேரியண்டில் உள்ளதை போல ட்ரிபிள் கேமரா செட்டப்பிற்கு பதிலாக டூயல் ரியர் கேமராக்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி மற்றும் ரியர் கேமராக்களை தவிர, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மற்றும் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மற்ற அம்சங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.80,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.92,999
சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Plus Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,11,999
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Ultra Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,29,999
12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,41,999
12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,65,999


Click it and Unblock the Notifications








