யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 3900mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 3900mAh பேட்டரி, கியூஎச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரூ.12,000 சலுகை விலையுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) களமிறங்கி இருக்கிறது. IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 போன்ற பீச்சர்களுடன் குவாலிட்டியிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த கேலக்ஸி எஸ்25 எட்ஜ் போனின் விலை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் பிளிப்கார்ட் விற்பனை (Samsung Galaxy S25 Edge Flipkart Sale): இந்திய மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,21,999ஆகவும் இருக்கிறது. இப்போது, 512 ஜிபி வேரியண்ட் மட்டும் சாம்சங் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது.

அறிமுக சலுகையில் ரூ.12,000 டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,21,999 விலை கொண்ட 512 ஜிபி வேரியண்ட்டை ரூ.1,09,999 விலையில் வாங்கி கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் போனை டைட்டானியம் சில்வர் (Titanium Silver) அல்லது டைட்டானியம் ஜெட்பிளாக் (Titanium Jetblack) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Specifications): இந்த கேலக்ஸி மாடலின் டிசைனை பார்க்கையில், பெயருக்கு ஏற்ப வெறும் 5.8 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல 163 கிராம் எடை மட்டுமே கிடைக்கிறது. ஹேண்டி மற்றும் காம்பாக்ட் ஸ்மார்ட்போன் மாடலை விரும்பும் கஸ்டமர்களுக்கு இது பக்கா ஆப்ஷனாக இருக்கும்.
அல்ட்ரா ஸ்லிம் மாடலாக இருப்பதால், 3900mAh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர் ஷேரிங் சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 (Corning Gorilla Glass Ceramic 2) பாதுகாப்பு கிடைக்கிறது.

இந்த பாதுகாப்புடன் 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி25 எட்ஜ் மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. இந்த 3என்எம் மாடலில் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. கேமராவில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமரா வருகிறது.
இந்த கேமராவுக்கு 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் கிடைக்கிறது. மேலும், 2X ஆப்டிகல் ஜூமிங், 10X டிஜிட்டல் ஜூமிங், 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. அல்ட்ராஎச்டி ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த எட்ஜ் மாடலில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








