Home
Mobile

மே 23 முதல் SALE.. 5.8 மிமீ ஸ்லிம் டிசைனில் 200MP கேமரா.. Samsung Galaxy S25 Edge அறிமுகம்.. என்ன விலை?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஸ்லிம் ஸ்மார்ட்போன் (Slim Smartphone) ஆக.. கேலக்ஸி எஸ்25 சீரீஸின் லேட்டஸ்ட் மாடல் ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . வெறும் 5.8 மிமீ தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், இதுவரை கேலக்ஸி எஸ் சீரிஸில் அறிமுகமானதிலேயே மிகவும் மெலிதான ஸ்மார்ட்போனாகும்.

ஸ்லிம் டிசைனை தவிர்த்து இது 200எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ஸ்க்ரீன் ப்ரொடெக்ஷன், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 போன்ற ஹை எண்ட் அம்சங்களையும் கொண்டுள்ளது. விலை நிர்ணயம் அடிப்படையில் இது கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

மே 23 முதல் SALE.. Samsung Galaxy S25 Edge அறிமுகம்.. என்ன விலை?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் உலகளாவிய விலை, விற்பனை தேதி (Samsung Galaxy S25 Edge Price, Sale Details): சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் ஏற்கனவே உலகளவில் தொடங்கி விட்டது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற மே 23 ஆம் தேதி முதல் உலகளாவிய ஸ்டோர்களில் $1,099.99 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ. 94,000) என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும்.

டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஐசி ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் 3 ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. ஆனால் இந்த போன் இந்தியாவில் அமேசான் மற்றும் பிற விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கும்; அதுகுறித்த தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Full Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.

சாஃப்ட்வேர்-ஐ பொறுத்தவரை இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Edge Launched Globally Full Specifications Features Price Sale From May 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X