குட்டி 3900mAh பேட்டரி உடன்.. Samsung-ன் 163 கிராம் போன்.. 12GB ரேம், 200MP கேமராவும் இருக்கு.. எந்த மாடல்?
ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஆனது திடீரென "மினி", "காம்பெக்ட்", "ஸ்லிம்", "எட்ஜ்" ஆகிய குறிசொல்களை கொண்ட ஸ்மார்ட்போன்களின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளன. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடலை அறிமுகம் செய்துள்ளது; இது ஒன்பிளஸ் 13எஸ் ஆக இந்திய சந்தைக்கும் வரவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ்-ன் கீழ் முற்றிலும் புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) என்கிற மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் இவ்விரு (ஆப்பிள் மற்றும் ஒன்பிளஸ்) நிறுவனங்களின் முக்கிய போட்டியாளர் ஆன சாம்சங், இந்த பட்டியலில் இணைகிறது; அதுவும் இந்த மாதமே!

அதென்ன மாடல்? சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் நான்காவது மாடல் ஆக கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போனை 2025 மே மாதமேஅறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தி வகையில் (WinFuture வழியாக) கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் லீக் ஆகியுள்ளன.
முக்கிய ஒற்றுமை, கூடவே ஒரு முக்கிய வேறுபாடு: சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடல் ஆனது எஸ்25 சீரிஸில் உள்ள மற்ற மாடல்களை போலவே ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் மூலம் இயக்கப்படலாம்; மேலும் 3 கேமராக்களுக்கு பதிலாக 2 கேமராக்களுடன் எஸ்25 சீரிஸில் அறிமுகமாகும் ஒரே மாடலாகவும் இது மாறக்கூடும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 163 கிராம் லைட் வெயிட் டிசைன்
- 5.85 மிமீ அளவிலான ஸ்லிம் டிசைன்
- முன் மற்றும் பின்புறத்தில் கிளாஸ் உடன் கூடிய டைட்டானியம் ஃபிரேம்
- முன் பக்கத்தில் கார்னிங் கிளாஸ் செராமிக் 2 (Corning Gorilla Glass Ceramic 2)
- பின் பக்கத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2)
- தூசி மற்றும் நீர் ஊடுருவலுக்கு எதிராக ஐபி68 ரேட்டிங்
- 1440 x 3120 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே
- டிஸ்பிளேவின் கீழ் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன்யுஐ 7 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.7 அபெர்க்ஷர் மற்றும் 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ உடன் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 120-டிகிரி எஃப்ஓவி உடன் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 80-டிகிரி எஃப்ஓவி உடன் 12-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- வைஃபை 7
- ப்ளூடூத் 5.4
- 3900mAh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யலாம்? ஜெர்மனியில் இந்த ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,19,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள 512ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.1,30,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுக்கு இடையே இருக்க வாய்ப்புள்ளது. கடைசியாக இது டைட்டானியம் ஜெட்பிளாக் (Titanium Jetblack), டைட்டானியம் ஐஸ்ப்ளூ (Titanium Icyblue) மற்றும் டிடானியம் சில்வர் (Titanium Silver) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. Source, Photo Courtesy: https://winfuture.de/news | Parky Parkhar


Click it and Unblock the Notifications








