Home
Mobile

Samsung பேட்டான் பாரு.. 5.8 மி.மீ பாடியில் 5G போன்.. 200MP கேமரா.. 3900mAh பேட்டரி.. டிஸ்கவுண்டில் சேல்!

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 5000mAh பேட்டரி போன்களின் காலம் மலையேறி போய்விட்டது. 8000mAh பேட்டரி, 10000mAh பேட்டரி கொண்ட மாடல்கள் சாதாரணமாக கிடைக்கின்றன. ஆனால், ஸ்லிம் மற்றும் வெயிட்டில் காம்ப்ரமைஸ் செய்யாமல் இருக்க முடியாது. இதில் சாம்சங் மட்டும் விதிவிலக்காக இருக்கிறது.

5.8 எம்எம் தடிமன் பாடி மற்றும் 163 கிராம் எடையில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் 5ஜி (Samsung Galaxy S25 Edge 5G) ஸ்மார்ட்போனை களமிறக்கி, ஸ்லிம் மற்றும் லைட் வெயிட்டில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் கஸ்டமர்களை மூக்கில் விரல வைக்க செய்தது. ஆனால், வெளியானபோது, ரூ,1,09,999 ஆக பட்ஜெட் இருந்தது.

Samsung பேட்டான் பாரு.. 5.8 மி.மீ பாடியில் 5G போன்.. 200MP கேமரா!

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.69,999 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்து இருந்தால், கூடுதலாக ரூ.3,500 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே, ரூ.66,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

டைட்டானியம் ஜேட் பிளாக் (Titanium Jetblack), டைட்டானியம் சில்வர் (Titanium Silver) ஆகிய 2 கலர்களில் வாங்கி கொள்ளலாம். டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 (Corning Gorilla Glass Ceramic 2) புரொடெக்சன் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge 5G Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite 3nm) சிப்செட் உள்ளது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் உள்ளன. 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. ரைட்டிங் அசிஸ்ட் (Writing Assist), டிராயிங் அசிஸ்ட் (Drawing Assist) கொடுத்துள்ளது. மேலும், கால் டிராஸ்கிரிப்ட் (Call Transcript), ஆடியோ எரைசர் (Audio Eraser) பீச்சர்கள் உள்ளன.

பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் கொடுக்கும்படி 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் (Dynamic AMOLED 2X) டிஸ்பிளே உள்ளது. இதில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 எம் கலர் டெப்த் வருகிறது. 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 2X ஆப்டிகல் ஜூம் உள்ளது. 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் உள்ளது. ஏஐ என்ஹான்ஸ்டு ப்ரோவிசுவல் என்ஜின் (AI Enhanced ProVisual Engine) கொடுக்கப்பட்டு உள்ளது. 12 எம்பி செல்பீ ஷூட்டருடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் 5ஜி வருகிறது.

இந்த 5.8 மிமீ பாடியிலும் 3900mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் கொடுத்துள்ளது. கூடுதலாக வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ, வை-பை 7 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டியை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் 5ஜி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Edge 5G Available At Discounted Price in Flipkart Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X