Home
Mobile

லேட்டஸ்ட் Samsung Galaxy மாடல் மீது ரூ.25000 விலை குறைப்பு.. எல்லாம் Galaxy S26 அறிமுக தேதி வெளியான நேரம்!

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மாடல்களை எப்போது அறிமுகம் செய்யும், அவைகள் எந்த தேதியில் முன்பதிவு செய்ய கிடைக்கும்? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? எப்போது இந்திய அறிமுகம்? என்கிற விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

புதிய கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் லீக் ஆன வேகத்தில் 2 பழைய கேலக்ஸி எஸ்25 சீரீஸ் மாடல்களின் விலைகள் குறைந்துள்ளன. அவைகள் சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S25 Plus) மாடல்கள் ஆகும்.

லேட்டஸ்ட் Samsung Galaxy மாடல் மீது ரூ.25000 விலை குறைப்பு!

பிளிப்கார்ட்டில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.80,999 ஆகும். அதாவது ரூ.6000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது.

சுவாரசியமாக, பிளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனும் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.99,999 ஆகும். அதாவது ரூ.25,000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது.

கேலக்ஸி எஸ்26 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை 2026 பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில், சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வு முடிந்ததும், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus), சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஆகியவற்றை பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை முன்பதிவு செய்யலாம்.

பின்னர் அனைத்து கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மாடல்களும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்த வெளியீட்டு காலவரிசை தென் கொரியாவிற்கானது, மேலும் இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கு முன்கூட்டிய ஆர்டர் தேதிகள் சற்று வேறுபடலாம். அதாவது மார்ச் 2026 இல் நடக்கலாம்.

கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? எக்ஸ் தளம் வழியாக, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் கேஜெட்ஸ் டேட்டா (Gadgetsdata) வழியாக கிடைத்த தகவலின்படி - கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய 6.3-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உடனான பெரிய 6.7-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 2கே ரெசல்யூஷன் உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் பெறலாம். மேலும் இந்த இரண்டு மாடல்களும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை தக்கவைத்து கொள்ளலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது எக்ஸினோஸ் 2600 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆல் இயக்கப்படும் என்று டிப்ஸ்டர் நம்புகிறார். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் ஆனது ஸ்னாப்டிராகன் மாறுபாட்டை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடுகிறது, அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் எக்ஸினோஸ் வெர்ஷனை வெளியிடுகிறது

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டுமே 50எம்பி (மெயின்) + 12எம்பி (அல்ட்ரா வைட்) + 50எம்பி (டெலிஃபோட்டோ) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 4300mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்; கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பெரிய 4,900mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 and Galaxy S25 Plus Price Drops After Galaxy S26 Series Launch Date Leak
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X