Home
Mobile

Samsung Galaxy S25 இந்தியாவில் விற்பனை.. யாருமே எதிர்பார்க்காத விலையில்.. அதிரடி விற்பனைக்கு ரெடியா?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி S25 (Samsung Galaxy S25), சாம்சங் கேலக்ஸி S25 பிளஸ் (Samsung Galaxy S25+) மற்றும் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடல்களை ஜனவரி 22, 2025 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய விற்பனை குறித்த தேதிகள் மற்றும் விலை விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேலக்ஸி S25 சீரிஸ் வரிசையில் ஆரம்ப மாடலான சாம்சங் கேலக்ஸி S25 போனின் ஸ்டோரேஜ் விபரம், விலை மற்றும் விற்பனை விபரங்கள் இங்கே.

சாம்சங் கேலக்ஸி S25 (Samsung Galaxy S25) ஸ்மார்ட்போன் சாதனம் 256GB மற்றும் 512GB ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வரும் பிப்ரவரி 4, 2025 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன் இந்தியாவில் எக்ஸ்க்ளூஸிவ் மாடலாக சாம்சங் கேலக்ஸி S25 போனின் 128GB மாடலும் கூட விற்பனைக்கு வரலாம் என்று லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Samsung Galaxy S25 இந்தியாவில் விற்பனை.. யாருமே எதிர்பார்க்காத விலை..

Samsung Galaxy S25 இந்தியாவில் விற்பனை.. யாருமே எதிர்பார்க்காத விலையில்:

இந்த மாடல் இந்திய சந்தையில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S25 (Samsung Galaxy S25) ஸ்மார்ட்போனின் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் 12GB ரேம் உடன் விற்பனைக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. சரி, எது எப்படியாக இருந்தாலும் சாம்சங் கேலக்ஸி S25 போனின் 256GB மற்றும் 512GB மாடல் விற்பனையாக போவது உறுதி என்பதால், இதன் விலை விபரங்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி S25 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்தியாவில் ரூ. 80,999 என்ற விலை முதல் வாங்க கிடைக்குமென்றும், அதேபோல், இதன் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 92,999 என்ற விலையில் வாங்க கிடைக்குமென்றும் கூறப்படுகிறது. இதன் விற்பனை வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் துவங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி S25 (Samsung Galaxy S25):

இதன் விற்பனை துவங்கிய பிறகு, சிறிய இடைவெளியில், சாம்சங் நிறுவனம் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலை விற்பனைக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S25 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் சாதனம் இந்தியாவில் ரூ. 74,999 விலை முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதே விலையில் கடந்த வருடம் சாம்சங் நிறுவனம் Galaxy S24 8GB/128GB மாடலை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் வரை, சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில், Samsung Galaxy S25 சாதனத்தின் 12GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 128GB வேரியண்ட் மாடல் ஒருவேளை ஆப்லைன் கடைகளில் மட்டும் கிடைக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Samsung Galaxy S25 சாதனம் Icyblue, Navy, Silver Shadow மற்றும் Mint நிறங்களுடன், சாம்சங் வலைத்தள பிரத்தியேக நிறங்களின் கீழ் Blueblack, Coralred மற்றும் Pinkgold ஆகியவை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 12GB RAM 256GB 512GB Price and Sale Date India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X