வெயிட் பண்ணது வீண் போகல.. 4000mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. SD 8 ஜென் 3 சிப்செட்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் எப்போது கிடைக்கும் என்று சாம்சங் பிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வெர்ஷன் வெளியாகிவிட்டது. அதேபோல விலை மற்றும் விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரம் இதோ.
குளோபல் மார்கெட்டிலும், இந்திய மார்கெட்டில் கடந்தாண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் வெளியாகின. இதில் சாம்சங் கேலக்ஸி 24 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மற்றும் எக்ஸினோஸ் 2400 சிப்செட் என்று 2 வெர்ஷன்கள் இருந்தன. ஆனால், இந்தியாவில் எக்ஸினோஸ் 2400 வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

இதனால், சாம்சங் பிரியர்கள் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வெர்ஷன் எப்போது இங்கு வெளியாகும் என்று வெயிட்டிங் மோடில் இருந்தனர். இவர்களது வெயிட்டிங் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வெர்ஷன் இந்தியாவில் கிடைக்க இருப்பது மட்டுமல்லாமல், விலை விவரங்களும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வெர்ஷன் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ,3,750 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வர இருக்கிறது.
ஆகவே, ரூ.71,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வெர்ஷனின் விற்பனையானது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) மூலம் தொடங்க இருக்கிறது. இது செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது. சிப்செட் தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அம்சங்கள் (Samsung Galaxy S24 Specifications): இந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைப்பதால், பிரீமியம் டியூரபிலிட்டி கிடைக்கிறது. ஒரு வருட பழைய மாடலாக இருப்பதால் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) கிடைக்கிறது. ஆனால், 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களையும், செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங், 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 12 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.
IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 4000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black), ஆம்பர் எல்லோ (Amber Yellow), கோபால்டு வயலெட் (Cobalt Voilet) மற்றும் மார்பிள் கிரே (Marble Gray) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








