அதிரவிடும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. அறிமுகமானது சாம்சங் போன்.. எந்த மாடல்?
Samsung Galaxy Unpacked 2024 நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அம்சங்கள்(Samsung Galaxy S24 specifications): 3.39 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எடிட்டிங், கேமிங் ஆப்ஸ் போன்ற அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஆனது 6.2-இன்ச் ஃபுல் எச்டி இன்ஃபினிட்டி-ஓ டைனமிக் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 3120 x 1440 பிக்சல்ஸ், 2600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்ல கிளாஸ் விக்டஸ் 2 கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.
அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + OIS ஆதரவு கொண்ட 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக 4000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் பிளஸ், யுஎஸ்பி 3.1, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன். பின்பு Qi வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாம்சங் போன்.
ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black), மார்பிள் கிரே (Marble Gray), கோபால்ட் வயலட் (Cobalt Violet) மற்றும் ஆம்பர் யெல்லோ (Amber Yellow) நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 போன் வெளிவந்துள்ளது. பின்பு 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டசாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் விலை USD 799.99 (ரூ.66,535)-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை USD 859.99 (இந்திய மதிப்பில் ரூ.71,525)-ஆக உள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி பல்வேறு நாடுகளில் இந்த கேலக்ஸி எஸ்24 போன் விற்பனைக்கு வரும்


Click it and Unblock the Notifications








