சரசரவென சரிந்த Samsung 5ஜி போன் விலை.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் தரமான சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) ஸ்மார்ட்போனின் விலை குறைத்துள்ளது. குறிப்பாக அமோலெட் டிஸ்பிளே, 8K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு, எக்ஸினோஸ் 2400 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.79,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் தளத்தில் ரூ.21,000 தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.58,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அம்சங்கள் (Samsung Galaxy S24 Specifications): 6.2 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் (Infinity-O Dynamic AMOLED 2X)டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் 2340 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 1 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன்கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஒன் யுஐ 6.1 (One UI 6.1) ஆதரவு கொண்ட டெகா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 (Deca-Core Samsung Exynos 2400) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் மாடல். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
ஓஐஎஸ் (OIS)ஆதரவு கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்24 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன் ரியர் கேமராக்கள் மூலம் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் செய்து கொள்ளலாம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் ற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது. என்றே 12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 4000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging), வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் உள்ளது. மேலும் இந்த சாதனத்தில் லைவ் டிரான்ஸ்லேட், சாட் அசிஸ்ட், நோட் அசிஸ்ட், சர்க்கிள் டூ சர்ச்ச் போன்ற ஏஐ பீச்சர்கள் உள்ளது.
ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black), மார்பிள் கிரே (Marble Gray), கோபால்ட் வயலட் (Cobalt Violet) மற்றும் அம்பர் எல்லோ (Amber Yellow) ஆகிய கலர்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. தரமான ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது.


Click it and Unblock the Notifications