பொளக்குது ஆர்டர்.. ரூ.8000 டிஸ்கவுண்ட்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) பிச்சிக்கும் விதமாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) போனானது, ரூ.8000 தள்ளுபடியோடு விற்பனைக்கு வந்துள்ளது. டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, டெலிபோட்டோ கேமரா, 4000mAh பேட்டரி, அல்ட்ரா ஸ்லிம் டிசைன் போன்ற அம்சங்களில் பின்னியெடுக்கிறது. விவரம் இதோ.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அம்சங்கள் (Samsung Galaxy S24 Specifications): இந்த சாம்சங் போனில் 6.2 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2X ரெசொலூஷன் கொண்ட டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொண்ட டெகா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 (Deca Core Samsung Exynos 2400) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஒன் யுஐ 6.1 (One UI 6.1) சப்போர்ட் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் கொண்டுள்ளது.
இந்த சாம்சங் போனில் 50 எம்பி OIS மெயின் கேமரா வருகிறது. அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) வருகிறது. இந்த டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் (Triple Rear Camera Setup) 3x ஆப்டிகல் ஜூமிங், 4K மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.
அதேபோல 12 எம்பி செல்பீ கேமராவானது, 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.6 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. அதோடு 167 கிராம் எடை கொண்டுள்ளது, இந்த சாம்சங் கேலக்ஸி போன்.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.இந்த போனில் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black), கோபால்ட் வயலட் (Cobalt Violet) மற்றும் அம்பர் எல்லோ (Amber Yellow) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 256 மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.89,999ஆகவும் இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8000 உடனடி தள்ளுபடியோடு விற்பனையாகிறது. இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனை ரூ.71,999 விலைக்கு வாங்கிகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








