Home
Mobile

பிளாட் டிஸ்பிளே.. 200எம்பி கேமரா.. 1டிபி ஸ்டோரேஜ்.. தரமான Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra ) போன் ஆனது பிளாட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பாக முன்பு சோனி நிறுவனம் அறிமுகம் செய்யும் பிரீமியம் போன்களை போன்றே இதன் வடிவமைப்பு உள்ளது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.

1டிபி ஸ்டோரேஜ்.. தரமான Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

6.78-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் வெளிவரும் இந்த கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன் ஆனது குவாட் எச்டி பிளஸ் ஆதரவு, 3120 x 1440 பிக்சல்ஸ், 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 2400 ( Exynos 2400 ) சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் வெளிவரும். அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்குகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் நான்கு வருடத்திற்கும் மேல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன்.

அதேபோல் OIS ஆதரவு கொண்ட 200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் (periscope zoom லென்ஸ்) என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

குறிப்பாக டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விட இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஆனது 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன். இந்த கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி போன் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 Ultra with Flat Display and 200MP Camera Launched Soon: specifications leaked online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X