Home
Mobile

செய்கைனா இதுதான்.. ரூ.20000 டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா.. 100X ஜூமிங்.. QUAD டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய சாம்சங் பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுவொரு லிமிடெட்-பீரியட் டிஸ்கவுண்ட் என்பதால், விற்பனை பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், இந்த சாம்சங் போனில் 200 எம்பி கேமரா, 100X ஜூமிங், கியூஎச்டி டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரியல் டைம் வாய்ஸ் டிரான்லேஷன், சாட் அசிஸ்டன்ட் போன்ற கேலக்ஸி ஏஐ பீச்சர்களும் (Galaxy AI Features) பேக் செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் போன்களை தூக்கி சாப்பிடும்படியான பீச்சர்களை கொண்ட மற்றொரு பிராண்ட் போன் வேண்டுமானால், கட்டாயம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலே ஆப்ஷனில் இருக்கிறது. கேமரா, பேட்டரி, டிஸ்பிளே போன்ற வழக்கமான பீச்சர்களிலேயே அல்ட்ரா பிரீமியம் டெக்னாலஜிகளை பயன்படுத்தி இருக்கிறது. மேலும், ஏஐ பீச்சர்களில் அடுத்த கட்டுத்துக்கு சென்றுள்ளது.

செய்கைனா இதுதான்.. ரூ.20000 டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா.. 100X ஜூமிங்!

இப்படிப்பட்ட இந்த போனுக்கு முழு ரூ.20,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதாவது, ரூ.8000 உடனடி கேஷ் பேக் மற்றும் ரூ.12,000 அப்கிரேட் கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது. அதேபோல ரூ.12,000 மதிப்பில் பேங்க் கேஷ்பேக் வருகிறது. இதுபோக 24 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,000 டிஸ்கவுண்ட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specification): இந்த சாம்சங் போனில் லைவ் டிரான்ஸ்லேட் ( Live Translate), ரியல்-டைம் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் டிரான்ஸ்லேஷன் (Real-time Voice & Text Translations), சாட் அசிஸ்ட் (Chat Assist), நோட் அசிஸ்ட் (Note Assist), டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (Transcript Assist) மற்றும் சர்க்கிள் டு சர்ச்ச் (Circle to Search) பீச்சர்கள் வருகின்றன.

இந்த போனில் 200 எம்பி மெயின் கேமரா + 12 அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் (OIS) டெக்னாலஜி, 100x ஸ்பேஸ் ஜூமிங் மற்றும் 5x ஆப்டிகல் ஜூமிங் வருகிறது. இதுபோக 8K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus) சப்போர்ட் வருகிறது. இந்த கேமராவை போலவே டிஸ்பிளே பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக வருகின்றன. ஆகவே, கொரில்லா ஆர்மோர் புரொடெக்சன் (Gorilla Armor Protection) கொண்ட 6.8 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனாமிக் அமோலெட் (Infinity-O-Edge Dynamic AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாகும். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனில் 45W சார்ஜிங் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging) வருகிறது.

இந்த சாம்சங் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.ரூ.1,29,999 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.20000 டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ. 1,09,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம். சாம்சங் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுவொரு லிமிடெட்-பிரீயட் சலுகை மட்டுமே.

ஆகவே, எப்போது வேண்டுமானாலும் பழைய விலைக்கு மாறலாம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற முக்கிய தளங்களில் இந்த டிஸ்கவுண்ட் உடன் விரைவில் விற்பனைக்கு வரலாம். இந்த சாம்சங் போனை டைட்டானியம் கிரே (Titanium Gray), டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் வயலட் (Titanium Violet) மற்றும் டைட்டானியம் எல்லோ (Titanium Yellow) கலர்களில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 Ultra With 200MP Camera 12GB RAM Gets Limited Period Discount Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X