மிரளுது அமேசான்.. முழுசா ரூ.40,999 டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) போனுக்கு ரூ.40,999 தள்ளுபடி கிடைக்கிறது. இவ்வளவு அதிகமாக தள்ளுபடி கிடைப்பதால், சாம்சங் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்ய தொடங்கிவிட்டனர். கேமரா, சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் இந்த கேலக்ஸி அல்ட்ரா 24 மாடலானது பிரீமியம் கொடுக்கிறது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் நிறுவனத்தின் அல்ட்ரா மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், இந்த மாடல்களில் பல வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் முன்கூட்டியே கொடுக்கப்படும். அதேபோல இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனுக்கும் 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது. ஆகவே, ஒரு வருட பழைய மாடலாக இருந்தாலும் கவலை இருக்காது.

இந்த பிரீமியம் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,29,999ஆக இருந்தது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,39,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,59,999ஆகவும் இருந்தது. இது அந்த போனுக்கு நிர்ணயிக்கப்பட்ட மார்கெட் விலையாகும்.
இப்போது, அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.89,000ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, ரூ.40,999 தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது. இவ்வளவு அதிகமான தள்ளுபடி கிடைப்பதால், விற்பனையில் வரவேற்பு பெற்றுள்ளது. டைட்டானியம் கிரே (Titanium Gray) கலருக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா ஆர்மர் (Corning Gorilla Armor) பாதுகாப்பு, டைட்டானியம் மிடில் ஃபிரேம் போன்ற குவாலிட்டி பீச்சர்களிலும் பிரீமியம் கொடுக்கிறது. லைவ் டிரான்ஸ்லேட், சர்க்கிள் டூ சர்ச்ச் போன்ற ஏஐ பீச்சர்களையும் வாரி வழங்கி இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, சிப்செட் போன்ற முக்கிய பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specifications): 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.8 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்யுஐ 6.1 (OneUI 6.1) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
இந்த ஆண்ட்ராய்டு ஜெனரேஷனில் இருந்து, 7 அப்டேட்களை பெற்று கொள்ளலாம். தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
100X ஸ்பேஸ் ஜூமிங் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10X ஆப்டிகல் ஜூமிங் செய்து கொள்ளலாம். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கிறது. அல்ட்ரா-சோனிக் ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமீயம் பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்தமாகவே பீச்சர்களில் மிரளவிட்டிருக்கிறது. அமேசானில் கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட்டும் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








