Home
Mobile

அடிச்சு புடிச்சு வாங்குறாங்க.. பாதிக்கு பாதி விலையில் 200MP Samsung கேமரா போன்.. யாரு விடுவா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் நான்-ஃபோல்டபிள் பிரிவில்.. அதாவது ஃபோல்டபிள் டிஸ்பிளே இல்லாத பிரிவில் விலை உயர்ந்த மாடல்கள் என்றால் அது கேலக்ஸி எஸ் சீரீஸின் கீழ் வரும் அல்ட்ரா மாடல்கள் தான். அப்படியான அல்ட்ரா மாடல்களில் ஒன்று தற்போது கிட்டத்தட்ட பாதிக்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கிறது.

அது சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போனாகும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,29,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) அறிமுகமானதை தொடர்ந்து, சிறிய அளவிலான விலை குறைப்பை பெற்றது; இப்போது கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கிறது.

பாதிக்கு பாதி விலையில் 200MP Samsung கேமரா போன்.. யாரு விடுவா!

பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் 2ஆம் கட்ட சுதந்திர தின விற்பனையின் ஒரு பகுதியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.62,729 க்கு வாங்க கிடைக்கிறது. இது - இந்த 2025 ஆம் ஆண்டில், ஒரு தரமான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மீது நீங்கள் பெறும் மிகவும் கவர்ச்சிகரமான ஆபர் ஆகும்

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவை ரூ.62,729 க்கு வாங்குவது எப்படி? தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில், சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.81,879 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அதன் அசல் வெளியீட்டு விலையிலிருந்து ரூ.48,120 என்கிற அளவிலான ஒரு பெரிய விலை குறைப்பை பெற்றுள்ளது

கூடுதலாக நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் விலையை இன்னும் குறைக்க முடியும். உதாரணமாக நீங்கள் உங்களுடைய பழைய சாம்சங் கேலக்ஸி எஸ்23 மாடலை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.19,150 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம், சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் பைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ ரூ.62,729 ஆக குறைக்க முடியும். ஆக மொத்தம் உங்களால் ரூ.67,270 சேமிக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டைட்டானியம் பிரேம்
- 6.8-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே
- 2600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- கொரில்லா கிளாஸ் ஆர்மர் ப்ரொடெக்ஷன்

- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
- லைவ் டிரான்ஸ்லேட் ஏஐ அம்சம்
- சர்க்கிள் டு சர்ச் ஏஐ அம்சம்
- 7 வருட ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் (ஆண்ட்ராய்டு 14 தொடங்கி)
- 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்

- 50 மெகாபிக்சல் 5எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 10 மெகாபிக்சல் 3எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 5000 mAh பேட்டரி
- 45W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
- 15W வயர்லெஸ் சார்ஜிங்
- ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரவு

பிளிப்கார்ட்டில் வேறு என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது?
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி (Samsung Galaxy S24 FE 5G) - ரூ.59,999 க்கு பதிலாக ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி (Samsung Galaxy S24 5G) - ரூ.74,999 க்கு பதிலாக ரூ.46,999 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) - ரூ.24,499 க்கு பதிலாக ரூ.16,387 க்கு வாங்க கிடைக்கிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 Ultra Selling At Half of the Price in Flipkart How to Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X