வெளுக்குது விற்பனை.. ரூ.30000 விலை குறைப்பு.. 200MP கேமரா.. 100X ஜூமிங்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. மாடல்?
இந்தியாவில் இருக்கும் சாம்சங் பிரியர்களுக்கு இதைவிட்டா நல்ல நேரம வராதுங்க என்று சொல்லும்படி 200 எம்பி கேமரா, 100X டிஜிட்டல் ஜூமிங், குவாட்எச்டி அமோலெட் டிஸ்பிளே, கியூ வயர்லெஸ் சார்ஜிங் பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) போன் வெளியாக இருப்பதால், நம்ப முடியாத அளவுக்கு இதன் விலை குறைப்பு இருக்கிறது.
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் ஜனவரி 22ஆம் தேதி நடக்க இருக்கும் கேலக்ஸி அன்பேக்ட் 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்வுக்காக காத்திருக்கிறது. ஏனென்றால், அந்த தேதியில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா களமிறங்குகிறது. இதனால் சாம்சங் பிரியர்கள் படு குஷியில் இருக்கின்றனர். இவர்களை எஸ்24 அல்ட்ரா போனின் விலை குறைப்பு மேலும் குஷியாக்கி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா விலை குறைப்பு (Samsung Galaxy S24 Ultra Price Drop): இந்த அல்ட்ரா போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,29,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.99,990 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.30,009 விலை குறைப்பில் இந்த பிரீமியம் போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்த விலையில் வாங்கி கொள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நேரடியாக விலை குறைப்பில் கிடைக்கிறது. இதனால், சாம்சங் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்ய தொடங்கிவிட்டனர். ஏனென்றால், இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனின் பீச்சர்கள் அப்படி இருக்கிறது. என்னென்ன பீச்சர்களை பேக் செய்துள்ளது?
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specification): இந்த அல்ட்ராவில் 7 ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Octa Core 4nm Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
கார்னிங் கொரில்லா ஆர்மோர் (Corning Gorilla Armor) புரொடெக்சன் கொண்ட 6.8 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அட்ரினோ 740 (Adreno 740) கிராபிக்ஸ் யூனிட் வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவில் 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட குவாட் ரியர் கேமரா செட்டப் கொடுக்கிறது. இந்த கேமராவில் ஏஐ பீச்சர்களுடன் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங், 10எக்ஸ் ஆப்டிகல் டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 100எக்ஸ் ஸ்பேஸ் ஜூமிங் சப்போர்ட் வருகிறது.
8K வீடியோ ரெக்கார்டிங்கில் மிரள விடுகிறது. ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஸ்கெட்ச் டூ இமேஜ், போர்ட்ராய்டு ஸ்டூடியோ, சர்க்கிள் டூ சர்ச்ச், லைவ் டிரான்ஸ்லேட், சாட் அசிஸ்ட் போன்றவை வருகின்றன. கேமிங் பிரியர்களுக்கான வேப்பர் சாம்பர் (Vapor Chamber) கிடைக்கிறது. அதோடு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கியூஐ சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் கிரே (Titanium Gray), டைட்டானியம் கிரீன் (Titanium Green), டைட்டானியம் ப்ளூ (Titanium Blue) மற்றும் டைட்டானியம் வயலட் (Titanium Violet) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ரூ.30,000 விலை குறைப்பு அதிகப்படியான டிஸ்கவுண்ட்டாகும்.


Click it and Unblock the Notifications








