Home
Mobile

இதுதான் புதிய சாம்சங் போன்.. 200MP கேமரா.. 25W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வரும் 2024 ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்று தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக மற்ற போன்களை விட இந்த கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

இதுதான் புதிய சாம்சங் போன்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன் ஆனது IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 6.78-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் வெளிவரும். மேலும் இந்த கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன் ஆனது குவாட் எச்டி பிளஸ் ஆதரவு, 3120 x 1440 பிக்சல்ஸ், 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அதேபோல் எக்ஸிநோஸ் 2400 ( Exynos 2400 ) சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் கொண்டு அறிமுகமாகும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

OIS ஆதரவு கொண்ட 200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் (periscope zoom லென்ஸ்) என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும்வழங்கப்படும். குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

இதுதான் புதிய சாம்சங் போன்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் அடுத்து ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.

photo courtesy: 91mobiles, twitter

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 Ultra photos leaked online: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X