இதுக்கு கம்மியா கனவுலகூட இல்ல.. ரூ.33,582 ரேட் கட்.. 200MP கேமரா.. 100X ஜூமிங்.. QHD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்கள் கனவிலும் நினைத்து பார்க்காத விலை குறைப்பில் குவாட்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 200 எம்பி மெயின் கேமரா, 100X ஜூமிங், 12 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், கேலக்ஸி ஏஐ பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) இப்போது கிடைக்கிறது. அமேசான் தளத்தில் நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக இதுவரையில் கிடைக்காத விலைக்கு வந்துள்ளது. பீச்சர்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specifications): இந்த சாம்சங் போனில் 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core 4nm Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது.

7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். பிரீமியம் ஏஐ பீச்சர்களுடன் ஒன்யுஐ 6.1 (OneUI 6.1) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவில் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்கள் பட்டையை கிளப்புகின்றன. போட்டோஸ் அல்லது டெக்ஸ்ட் குறித்து தெரிந்து கொள்ள சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) பீச்சர் கிடைக்கிறது.
போன் கால்களில் எந்த மொழியில் பேசினாலும் நொடிக்கு நொடி டிரான்ஸ்லேட் செய்யும்படி லைவ் டிரான்ஸ்லேட் (Live Translate) பீச்சர் வருகிறது. எந்த மொழியில் வேண்டுமானாலும் கம்யூனிகேட் செய்துகொள்ள இன்டர்பிரிடர் (Interpreter) வருகிறது. இந்த இன்டர்பிரிடர் பீச்சரானது, மொபைல் டேட்டா மற்றும் வை-பை டேட்டா இல்லை என்றாலும் பயன்படுத்த முடியும்.
ஆகவே, மொழி தெரியாத பகுதிகளுக்கு சென்றாலும், இதன் மூலம் கம்யூனிகேட் செய்து கொள்ளலாம். இதற்கு அடுத்து சாட் அசிஸ்ட் (Chat Assist) பீச்சர் கிடைக்கிறது. இந்த பீச்சர் மூலம் மெசேஜ்களை ப்ரோபஸ்னல் லெவலுக்கு கம்போஸ் செய்து கொள்ளலாம். அடுத்தது பெரிய நோட்ஸ்களை ஏஐ மூலம் சம்மரைஸ் செய்து கொள்ளும்படி நோட் அசிஸ்ட் (Note Assist) கிடைக்கிறது.
இதன் மூலம் முக்கிய நோட்ஸ்களை எளிதாக சம்மரைஸ் செய்து கொள்ளலாம். ஏஐ பவர்ட் எடிட்டிங் ஆப்ஷன்களுடன் போட்டோ அசிஸ்ட் (Photo Assist) கிடைக்கிறது. இந்த பீச்சர் மூலம் கட்-அவுட், ரிமூவ் போன்ற எடிட்டிங்களை ஏஐ உதவியுடன் செய்து கொள்ளலாம். இதுபோக கேமராவில் பல்வேறு ஏஐ பீச்சர்களை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனில் கிடைக்கின்றன.
அதாவது, ஏஐ ஜெனரேடேட் இமேஜ்களை (AI Generated Images) ஸ்லோவ் மோஷன் வீடியோக்களில் ஃபிரேம்-பை-ஃபிரேம் ஆட் செய்துகொள்ளும்படி இன்ஸ்டன்ட் ஸ்லோவ்-மோ (Instant Slow-mo) பீச்சர் கிடைக்கிறது. ஏற்கனவே, கிடைத்துவந்த சூப்பர் எச்டிஆர் (Super HDR) பீச்சர் ஏஐ மூலம் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குவாலிட்டியான போட்டோக்களை பெற்று கொள்ளலாம்.
மேலும், ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), போர்ட்ராய்டு ஸ்டூடியோ (Portrait Studio) போன்ற பிரத்யேக பீச்சர்களும் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ பீச்சர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனை அடித்து கொள்ள முடியாது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, ரேம், பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம். IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே உள்ளது.
ஆகவே, கார்னிங் கொரில்லா ஆர்மர் (Corning Gorilla Armor) புரொடெக்சன் கொண்ட 6.8 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் டிஸ்பிளே வருகிறது. இந்த இன்பினிட்டி ஓ எட்ஜ் டைனாமிக் அமோலெட் (Infinity O Edge Dynamic AMOLED) டிஸ்பிளே மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
பில்ட்-இன் எஸ் பென் (Built-in S Pen) கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனில் 200 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 2X ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் (Optical Quality Zoom) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி பெரிஸ்கோப் (Periscope) கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் 5X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) மற்றும் 10X ஆப்டிகல் குவாலிட்டி ஜூமிங் கிடைக்கிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உள்ளது. இந்த டெலிபோட்டோ கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங் வருகிறது. மேலும், இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
இந்த ஆப்டிகல் ஜூமிங் போக 100X ஸ்பேஸ் ஜூமிங் (Space Zooming), 8K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) மற்றும் லேசர் ஆட்டோ போகஸ் (Laser Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. போட்டோஸ் மற்றும் வீடியோஸ் அவுட்புட்டில் பிரீமியம் கொடுக்க ப்ரோவிசுவல் என்ஜின் (ProVisual Engine) கிடைக்கிறது. 5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் + கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது.
இந்திய மார்கெட்டில் வெளியானபோது, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,29,999ஆக இருந்தது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,39,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,59,999ஆகவும் இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.99,399 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
இதுபோக அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,982 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இப்போது ஆர்டர் செய்தால் ரூ.96,417 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனில் டைட்டானியம் கிரே, டைட்டானியம் எல்லோ போன்ற கலர்களும், கிரே, வயலெட் மற்றும் பிளாக் ஆகிய கலர்களும் ஆர்டருக்கு வருகின்றன. பிரீமியம் பீச்சர்கள் மற்றும் பில்ட் குவாலிட்டி கொண்ட மாடலுக்கு இந்த சாம்சங் போன் பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








