200MP கேமரா, 5100mAh பேட்டரி.. இங்க நான் தான் கிங்கு.. மிரட்டும் Samsung.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது தரமான கேமரா, பெரிய பேட்டரி, தனித்துவமான டிஸ்பிளே கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது சாம்சங் நிறுவனம். மேலும் தற்போது இந்நிறுவனம் ஒரு அசத்தலான போனை உருவாக்கி வருகிறது.
அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) எனும் ஸ்மார்ட்போனை தான் தற்போது உருவாக்கி வருகிறது சாம்சங் நிறுவனம். இந்த போன் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 200எம்பி மெயின் கேமரா ( ISOCELL HP2 sensor) + 3X ஆப்டிகல் ஜூம் 50எம்பி டெலிபோட்டோ கேமரா (telephoto camera) + 10எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் + மேக்ரோ கேமரா ஆகிய கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் டிஸ்எல்ஆர் கேமராவை வாங்க வேண்டிய வேலையே இருக்காது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.
குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸ் எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். எனவே வீடியோ எடிட்டிங், கேமிங் போன்ற பல வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸ் எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 16ஜிபி அல்லது 24ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 1டிபி வரை ஸ்டோரேஜ், எஸ்-பெண் (S-Pen) ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5100 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், டால்பி ஆடியோ போன்ற அட்டகாசமான வசதிகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போன் தரமான கேமரா வசதியுடன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








