Samsung Galaxy S24 சீரீஸ் VS iPhone 15 சீரீஸ்: எது பெஸ்ட்? எது விலை கம்மி? எது பவர்ஃபுல்? எதை வாங்கலாம்?
பல மாத காத்திருப்பிற்கு பின்னர் சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் 2024 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்24 சீரீஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. எதிர்பார்த்தது போலவே இந்த சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகி உள்ளன.
பெயர் குறிப்பிடுவது போலவே கேலக்ஸி எஸ்24 சீரீஸின் ஹை-எண்ட் மாடல் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) தான். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஹை-எண்ட் மாடலான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் உடன் நேரடியாக போட்டியிடும். இதேபோல கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்24 மாடல்கள் முறையே ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 உடன் போட்டியிடும்.

ஒருவேளை உங்களுக்கு கேலக்ஸி எஸ்24 சீரீஸ் அல்லது ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் மாடல்களில் எதை வாங்குவது என்கிற குழப்பம் இருந்தால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். கேலக்ஸி எஸ்24 சீரீஸ் அல்லது ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் மாடல்களில் இடையேயான ஒப்பீடும், மதிப்பீடும் இதோ:
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா VS ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்: சாம்சங்கின் அதன் புதிய எஸ்24 சீரீஸ் மாடல்களுக்கு 7 ஆண்டுகள் செக்யூரிட்டி மற்றும் ஓஎஸ் அப்டேட்களை உறுதி செய்துள்ளது. ஆனால் அதன் ஐபோன் 15 சீரிஸ் எவ்வளவு காலத்திற்கு சப்போர்ட்-ஐ பெறும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருந்தாலும் கூட ஆப்பிள் அதன் ஐபோன்களை நீண்ட காலத்திற்கு சப்போர்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐபோன் எக்ஸ்எஸ் (iPhone XS) மற்றும் ஐபோன் எஸ்கேஆர் (iPhone XR) ஆகியவைகள் ஆப்பிளின் ஐஓஎஸ் 17 அப்டேட்டை பெற்றுள்ளன.
மேலும் எஸ்24 சீரீஸில் புதிய ஏஐ அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எஸ்24 சீரிஸ் மாடல்கள் ஆனது கூகுளின் ஜெமினி ப்ரோ லேங்குவேஜ் மாடலால் இயக்கப்படும் பல செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டுவருவதாக சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவைகளில் லைவ் டிரான்ஸ்லேட், சாட் அசிஸ்ட், ட்ரான்ஸ்க்ரிப்ட் அசிஸ்ட் போன்றவைகளும் அடக்கம்.

மறுகையில் உள்ள ஆப்பிளின் ஐஓஎஸ் 17 ஆனது மிகவும் மெருகூட்டப்பட்ட ஆப்ரேட்டிங் சிஸ்டமாக கருதப்பட்டாலும் கூட, டிவைஸின் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் மீதான ஆப்பிளின் கட்டுப்பாட்டின் காரணமாக, குபெர்டினோ அடிப்படையிலான இந்த தொழில்நுட்ப நிறுவனமானது ஐஓஎஸ்-ல் ஏஐ அம்சங்களை இன்னும் சேர்க்கவில்லை.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் VS ஐபோன் 15 ப்ரோ: நிறைகளை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடலானது ஏராளமான ஏஐ அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது; மேலும் இது 12ஜிபி ரேம் உடன் வருகிறது; கூடவே பெரிய பேட்டரி மற்றும் டிஸ்பிளேவை பேக் செய்கிறது; கடைசியாக நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பெற்றுள்ளது.

குறைகளை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடலில் பெரிய அளவிலான கேமரா மேம்படுத்தல்கள் இல்லை; இது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் மட்டுமே வருகிறது; கடைசியாக - பழைய மாடலுடன் ஒப்பிடும் போது - சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான வடிவமைப்பு மாற்றங்கள் எதுவும் இல்லை.
நிறைகளை பொறுத்தவரை ஐபோன் 15 ப்ரோ மாடலானது பழைய ஐபோன் மாடல்களை விட சற்றே வசதியான பிடிமானதை வழங்குறது; யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது; இதன் டைட்டானியம் அலாய் உருவாக்கம்மேலதிக பிரீமியம் லுக்கை வழங்குகிறது மற்றும் கடைசியாக இது 1டிபி வரையிலான வரையிலான ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்ய உதவுகிறது. குறைகளை பொறுத்தவரை ஆப்பிளின் ஐஓஎஸ் இன்னும் வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது; வயர்டு சார்ஜிங் ஸ்பீட் மெதுவாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 VS ஐபோன் 15: இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை பொறுத்தவரை எஸ்24 ஆனது பஞ்ச்-ஹோல் கட்-அவுட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது; ஐபோன் 15 ஆனது டைனமிக் ஐலேண்ட் உடனான ஒரு பெரிய கட்அவுட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. எஸ்24 ஆனது 1-120ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் உடனான மிகவும் மென்மையான டிஸ்பிளேவை வழங்குகிறதுல ஐபோன் 15 ஆனது ஸ்டாண்டர்ட் 60ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஆனது 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது; ஐபோன் 15 அந்த 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது. எஸ்24 ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் / எக்ஸிநோஸ் 2400 சிப்செட் மூலம் இயங்குகிறது; ஐபோன் 15 ஆனது ஏ16 பயோனிக் சிப்செட் மூலம் இயங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஆனது 3எக்ஸ்-ஜூம் டெலிஃபோட்டோ கேமராவுடன் வருகிறது ஆனால் ஐபோன் 15 மாடலில் டெலிஃபோட்டோ கேமரா இல்லை. எஸ்24 ஆனது டீபால்ட் ஆக 12எம்பி இமேஜ்களை கைப்பற்றுகிறது; ஐபோன் 15 மாடலானது டீபால்ட் ஆக 24எம்பி இமேஜ்களை கைப்பற்றுகிறது. கடைசியாக எஸ்24 ஆனது 4000mAh பேட்டரியுடன் வருகிறது; ஐபோன் 15 ஆனது 3349mAh பேட்டரியுடன் வருகிறது.
விலைகளை பொறுத்தவரை இந்தியாவால் ஐபோன் 15 மாடல் ரூ.79,900 க்கும், ஐபோன் 15 ப்ரோ மாடல் ரூ.1,34,900 க்கும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.1,59,900 வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ரூ.1.29,999 க்கும், கேலக்ஸி எஸ்24 பிளஸ் ரூ.99,999 க்கும், கேலக்ஸி எஸ்24 ரூ.79,999 க்கும் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








