2024 பொங்கலுக்கு சீறும் 3 காளைகள்.. Samsung Galaxy S24 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு.. விலையும் லீக்!
ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ், ஒன்பிளஸ் 12, ஐக்யூ 12 5ஜி, விவோ எக்ஸ்100 சீரீஸ் உட்பட இதுவரை வெளியான அனைத்து பிரீமியம் / பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்குமான "அசல்" பதிலடியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் கேலக்ஸி எஸ்24 சீரீஸிற்கான கேலக்ஸி அன்பேக்டு 2024 ஈவென்ட் (Galaxy Unpacked 2024 Event) சரியாக எப்போது நடக்கும் என்கிற தேதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு எந்த தேதியில் நடக்கும்? கேலக்ஸி எஸ்24 சீரிஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

கேலக்ஸி அன்பேக்டு 2024 ஈவென்ட் எப்போது நடக்கும்? சாம்சங்கின் இந்த மாபெரும் வெளியீட்டு நிகழ்வானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி நடக்குமென்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி எஸ்சீரிஸை அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
கேலக்ஸி எஸ்24 சீரீஸின் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்? சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஸ்24 சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்: சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plsu), சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra).
என்னென்ன அம்சஙகளை பேக் செய்யும்? மூன்று கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடல்களுமே புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பெறும். எஸ்24 சீரிஸின் வெளியீடு தொடர்பான டீசரில் கூகுள் பார்ட் ஏஐ போன்ற லோகோவை காண முடிகிறது. ஆக ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்காக சாம்சங் நிறுவனம் கூகுளுடன் கூட்டு சேர்ந்துள்ளதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.
மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஆகிய இரண்டும் குவால்காமின் லேட்டஸ்ட் மற்றும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யலாம். இந்த சிப்செட் வேகமான செயல்திறன், மென்மையான கிராபிக்ஸ் மற்றும் மல்டிடாஸ்கிங்கை எளிதாக கையாளும் திறனை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
வெண்ணிலா வேரியண்ட் ஆனா கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 2400 (Exynos 2400) சிப்செட் உடன் வரலாம். வடிவமைப்பை பொறுத்தவரை, சாம்சங் அதன் போட்டியாளரான ஆப்பிளுக்கு போட்டியாக, கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா மாடலில் உள்ள அலுமினியம் ஃப்ரேமை நீக்கி, டைட்டானியம் ஃப்ரேமை தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
இதுவரை வெளியான பல அறிக்கைகள், சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்24 சீரிஸின் கேமரா செட்டப்பில் முக்கிய மாற்றங்களை செய்யும் என்று பரிந்துரைக்கின்றன. அல்ட்ரா மாடலில் 200எம்பி மெயின் கேமரா + 12எம்பி சென்சார் + 50எம்பி சென்சார் + 10எம்பி சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பும், முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமராவும் இடம்பெறலாம்.
பேட்டரியை பொறுத்தவரை, அல்ட்ரா மாடலில் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி இடம்பெறலாம். இதுதவிர்த்து மொத்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸிலும் சாட்டிலைட் டெக்ஸ்ட்டிங் அம்சம் (Satellite texting feature) சேர்க்கப்படலாம். இது செயற்கைக்கோள் இணைப்பின் வழியாக எமெர்ஜன்சி மெசேஜை அனுப்ப உதவுமொரு அம்சமாகும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, கேலக்ஸி எஸ்24 சீரீஸின் விலை நிர்ணயமானது கேலக்ஸி எஸ்23 சீரிஸின் விலைகளுடன் ஒற்றுப்போகும் என்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.75,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகமாகும்.
நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.74,999 க்கு அறிமுகமானது. கேலக்ஸி எஸ்23 பிளஸின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.94,999 க்கும், கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கும் அறிமுகமானது.


Click it and Unblock the Notifications








