Home
Mobile

அடிச்சு புடிச்சு ப்ரீ-புக்கிங்.. மூன்றே நாளில் 2.5 லட்சம் புக்கிங்.. மிரளவிடும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ்!

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படி சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) போன்களின் ப்ரீ-புக்கிங் வெறும் 3 நாட்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்தை எட்டி இருக்கிறது. இவ்வளவு வரவேற்பு பெறவதற்கு அந்த போன்களில் அப்படியென்ன இருக்கிறது?

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அம்சங்கள் (Samsung Galaxy S24 Specifications): இந்த போனில் 6.2 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட டெகா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 சிப்செட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ளது.

மூன்றே நாளில் 2.5 லட்சம் புக்கிங்.. மிரளவிடும் சாம்சங் கேலக்ஸி எஸ்24!

அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4000mAh பேட்டரி வருகிறது. இதில் Qi வர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடையாது. 8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது.

8ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.89,999ஆக இருக்கிறது. இந்த போனுக்கு ரூ.15,000 மதிப்பில் அப்கிரேட் போனஸ், ரூ.5,000 மதிப்பில் எச்டிஎப்சி பேங்க் கேஷ்பேக், 9 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ கொடுக்கப்படுகிறது. இந்த இஎம்ஐ ஆப்ஷனில் கூடுதலாக ரூ.5,000 அப்கிரேட் போனஸ் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S24 Plus Specifications): இந்த சாம்சங்கில் 6.2 இன்ச் கியூஎச்டி பிளஸ் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வருகிறது. 12 எம்பி செல்பீ உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. அதோடு டெகா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 சிப்செட் கொண்டுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4900mAh பேட்டரி வருகிறது. இதில் Qi வயர்லெஸ் மற்றும் பவர்ஷேர் வயர்லெஸ் சப்போர்ட் உள்ளது. 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.99,999ஆக இருக்கிறது.

12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது. இந்த போனுக்கு ரூ.12,000 மதிப்பில் சாம்சங் அப்கிரேட் போனஸ், ரூ.5000 மதிப்பில் எச்டிஎப்சி பேங்க் கேஷ்பேக் மற்றும் 11 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. இந்த இஎம்ஐயில் ரூ.5000 அப்கிரேட் போனஸ் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specifications): இந்த போனில் 6.8 இன்ச் குவாட் எச்டி டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 கொண்டிருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா வருகிறது.

மூன்றே நாளில் 2.5 லட்சம் புக்கிங்.. மிரளவிடும் சாம்சங் கேலக்ஸி எஸ்24!

அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் வருகிறது. 12 எம்பி செல்பீ வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. Qi வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. 12ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.1,29,999ஆக இருக்கிறது.

12ஜிபி+512ஜிபி மாடலின் விலை ரூ.1,39,999ஆகவும், 12ஜிபி+1ஜிபி மாடலின் விலை ரூ.1,59,999ஆகவும் இருக்கிறது. இந்த போனுக்கும் ரூ.12,000 மதிப்பில் சாம்சங் அப்கிரேட் போனஸ், ரூ.5000 மதிப்பில் எச்டிஎப்சி பேங்க் கேஷ்பேக் மற்றும் 11 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. இந்த நோ காஸ்ட் இஎம்ஐயில் ரூ.5000 அப்கிரேட் போனஸ் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 Series Pre booking Hits 250000 in 3 Days Check Specifications Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X