ஆர்டர் தெறிக்க விடுறாங்க! ஆஃபர், கேஷ்பேக், நோ-காஸ்ட் EMI-னு எல்லாமே உண்டு! Samsung Galaxy S24 விற்பனை ஆரம்பம்!
ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) மற்றும் ஒன்பிளஸ் 12 சீரிஸிற்கு (OnePlus 12 Series) அடுத்தபடியாக.. ஒட்டுமொத்த இந்தியர்களும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்களின் இந்திய விற்பனை தொடங்கி உள்ளது.
கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra), கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Galaxy S24 Plus) மற்றும் Galaxy S24 (கேலக்ஸி எஸ்24) ஆகிய மூன்று மாடல்களுமே சாம்சங் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் உருவான 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட்போன்கள் (Made in India Smartphones) ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸின் விலை விவரங்கள்: வெண்ணிலா வேரியண்ட் ஆன கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
அடுத்ததாக உள்ள கேலக்ஸி எஸ்24 பிளஸின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.99,999-க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,09,999-க்கும் வெளியாகியுள்ளது. கடைசியாக உள்ள கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.1,29,999-க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,999-க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.1,59,999-க்கும் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் மீதான விற்பனை சலுகைகள்: சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அல்லது கேலக்ஸி எஸ்24 பிளஸ்ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் அப்கிரேடட் போனஸ் (upgrade bonus) மற்றும் பேங்க் கேஷ்பேக் (bank cashback) உட்பட ரூ.12,000 மதிப்புள்ள பலன்களைப் பெறலாம்.
மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ரூ.10,000 மதிப்புள்ள பலன்களை பெறலாம். கூடுதலாக, சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸின் கீழ் உள்ள எந்தவொரு ஸ்மார்ட்போனை தேர்வு செய்தாலும், உங்களுக்கு 24 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ (No-Cost EMI) விருப்பம் அணுக கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸின் கலர் ஆப்ஷன்கள்: வெண்ணிலா வேரியண்ட் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஆனது அம்பர் யெல்லோ (Amber Yellow), கோபால்ட் வயலட் (Cobalt Violet) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) கலர்களில் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஆனது கோபால்ட் வயலட் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும்.
ஒருவேளை சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர் (Samsung Online Store) வழியாக பிளஸ் மாடலை வாங்கினால் ஜேட் கிரீன் (Jade Green) மற்றும் சஃபைர் ப்ளூ (Sapphire Blue) கலர்களிலும் வாங்கலாம். இதற்கிடையில், டைட்டானியம் சேஸ்ஸுடன் (Titanium Chase) கூடிய கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது டைட்டானியம் கிரே (Titanium Grey), டைட்டானியம் வயலட் (Titanium Violet) மற்றும் டைட்டானியம் பிளாக் (Titanium Black) கலர்களில் வாங்க கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலை சாம்சங் நிறுவனத்திடம் அதிகாரப்பூர் ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்கினால் உங்களுக்கு டைட்டானியம் ப்ளூ (Titanium Blue), டைட்டானியம் கிரீன் (Titanium Green) மற்றும் டைட்டானியம் ஆரஞ்சு (Titanium Orange) ஆகிய மூன்று கூடுதல் கலர் ஆப்ஷன்கள் தேர்வு செய்ய கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸின் முக்கிய அம்சங்கள்: மூன்றுமே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் அனைத்து மாடல்களுமே 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகின்றன. இந்த அளவிலான பீக் ப்ரைட்னஸ் ஆனது முன்னர் அறிமுகமான எந்தவொரு கேலக்ஸி ஸ்மார்ட்போனிலுமே இல்லை. மேலும் இந்த மூன்று மாடல்களுமே 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 7 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும்.


Click it and Unblock the Notifications








