Samsung Galaxy S24 Plus அறிமுகமானது.. ஜன.31 முதல் விற்பனை.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
எதிர்பார்த்தபடியே கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. இந்த சீரீஸின்கீழ் கேலக்ஸி எஸ்24 (Galaxy S24), கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Galaxy S24 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மூன்று மாடல்களுமே கேலக்ஸி ஏஐ (Galaxy AI) உடன் வந்துள்ளன. இது லைவ் டிரான்ஸ்லேட், நோட் அசிஸ்டென்ட் மற்றும் சர்க்கிள் டூ சேர்ச் போன்ற ஏஐ அம்சங்களை ஸ்மார்ட்போன்களுக்கு கொண்டுவருகிறது. கேலக்ஸி எஸ்24 சீரீஸின் பிளஸ் வேரியண்ட் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸின் அம்சங்கள்: இது 1ஹெர்ட்ஸ் முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் விஷன் பூஸ்டர் ஆதரவு உடனான 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது. இந்திய வேரியண்ட் ஆனது 12ஜிபி ரேம் உடனான எக்ஸிநோஸ் 2400 சிப்செட் உடன் வரும்.
கேமராக்களை பொறுத்தவரை. கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் லென்ஸ், 85-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஓஐஎஸ் உடனான 50-மெகாபிக்சல் வைட் கேமரா + 120-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 உடைந்தன 12-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடனான 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.
முன்பக்கத்தை பொறுத்தவரை எப்f/2.2 அபெர்க்ஷர் லென்ஸ் மற்றும் 80-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ உடனான 12-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 45W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 15W சார்ஜிங் ஸ்பீடை வழங்கும் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவையும் கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.3, Wவைஃபை டைரக்ட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்களை பொறுத்தவரை இது ஐபி68 ரேட்டிங், சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி, பாஸ்கீ ஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் நாக்ஸ் வால்ட்டுக்கான ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.
என்ன விலை? சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடலின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.81,000 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.93,100 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விலைகள் கூடிய அறிவிக்கப்பட்டும். அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: சாம்சங் நிறுவனம் அவைகளை ஆம்பர் யெல்லோ ( Amber Yellow), கோபால்ட் வயலட் (Cobalt Violet), மார்பிள் கிரே (Marble Gray) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) என்று அழைக்கிறது. ஜனவரி 31 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








