பொளக்குது ஆர்டர்.. ரூ.32,000 ரேட் கட்.. QHD டிஸ்பிளே.. 12GB ரேம்.. 4900mAh பேட்டரி.. OIS கேமரா.. எந்த மாடல்?
பொசுக்குனு ரூ.32,000 விலை குறைப்பில் பிரீமியம் சாம்சங் போன் கிடைத்தால், ஆர்டர் பொளக்காமல் என்ன செய்யும்? அப்படியான விலைக்கு குவாட்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 4900mAh பேட்டரி, ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) கிடைக்கிறது. இதுபோக கேலக்ஸி ஏஐ பீச்சர்களையும் கொடுத்து அல்ட்ரா பிரீமியமாக கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
இந்த சாம்சங் போனில் கேலக்ஸி ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, போன் கால்களின் போது லைவ் டிரான்ஸ்லேட் செய்து கொள்ளலாம். ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட், சாட் அசிஸ்ட், நோட் அசிஸ்ட், சர்க்கிள் டூ சர்ச்ச் மற்றும் டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக டிஸ்பிளே, கேமரா, ரேம் மற்றும் சிப்செட் பீச்சர்கள் பின்னி எடுக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S24 Plus Specifications): கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கொடுக்கும் 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.
மேலும், ரவுண்டெட் கார்னர்களுடன் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. பிரீமியம் பர்பாமென்ஸ் கொடுக்கும்படி டெகா கோர் எக்ஸினோஸ் 2400 (Deca Core Exynos 2400 ) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.
பிரீமியம் மாடலாக இருப்பதால், 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் மட்டுமல்லாமல், 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவில் 8K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும். அதேபோல ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் உள்ளது.
மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) கிடைக்கிறது. ஆக்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங்கில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4900mAh கிடைக்கிறது.
இந்த பேட்டரிக்கு கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging) மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் போனை ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) மற்றும் கோபால்ட் வயலெட் (Cobalt Violet) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.99,999ஆக இருக்கிறது.
இது மார்கெட் விலையாகும். இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.67,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.32,000 விலை குறைப்பில் கிடைக்கிறது. இந்த விலை மாறக்கூடியது. ஆகவே, உடனடியாக ஆர்டர் செய்து கொள்ளுங்கள், இந்த ரூ.32,000 டிஸ்கவுண்ட் பெறுவதற்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டு ஆர்டர் தேவையில்லை.


Click it and Unblock the Notifications