Home
Mobile

200எம்பி கேமரா.. 6.65-இன்ச் டிஸ்பிளே.. முரட்டுத்தனமான போனை இறக்கிவிடும் Samsung.. என்ன மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் இந்த போன் முதலில் ஐரோப்பாவில் அறிமுகமாகும் என்றும், அதன்பிறகு தான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், அட்டகாசமான கேமரா மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இணையத்தில் வெளியான இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

200எம்பி கேமரா.. முரட்டுத்தனமான போனை இறக்கிவிடும் Samsung! என்ன மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவக்கப்பட்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உட்ன் அட்ரினோ 750ஜிபியு ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் கேமிங் ஆப்ஸ்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவற்றை தடையின்றி பயன்டுத்தலாம். இந்த போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 4900 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போனில் 200எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை
எடுக்க முடியும். அதேபோல் சற்று உயர்வான விலையில் தான் கேலக்ஸி எஸ்24 பிளஸ் போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 செக்யூரிட்டி உடனான டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜிபோன். பின்பு இந்த போன் பாரம்பரிய வடிவமைப்பான" இன்ஃபினிட்டி யு (Infinity U)டிசனையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம்34 5ஜி ஆனது ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் அல்லது மேக்ரோ சென்சாரும் உள்ளது. மேலும் இதன் முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

200எம்பி கேமரா.. முரட்டுத்தனமான போனை இறக்கிவிடும் Samsung! என்ன மாடல்?

எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC)மூலம் இயக்கப்படுகிறது இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி. பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி-க்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி
அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000எம்ஏஎச் என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரியை பேக் செய்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.17,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 Plus to Launch Soon with Snapdragon 8 Gen 3 SoC, 200MP Camera: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X