Home
Mobile

ரூ.25,000 விலை குறைப்பை Samsung போன்.. புதுசு வரலன்னு தெரிஞ்சதும் Amazon பார்த்த அடேங்கப்பா வேலை!

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் புதிய எட்ஜ் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரையிலாக இது ஏப்ரல் 2025 இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இது ஏப்ரல் 14 அல்லது 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

பின்னர் நம்பகமான டிப்ஸ்டர் வழியாக கிடைத்த ஆதாரங்களின்படி, சாம்சங் கேலக்சி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்மார்ட்போன் 2025 மே 13 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதாவது சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை ஒரு மாதம் தாமதப்படுத்தியுள்ளது.

ரூ.25,000 விலை குறைப்பை Samsung போன்!

இதற்கிடையில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவானது, சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் மீது மிகப்பெரிய விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.79,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது அமேசானில் இது 32% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.54,638 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் உங்களிடம் எச்டிஎப்சி (HDFC), பிஓபி (BOB) அல்லது ஃபெடரல் பேங்க் கார்டுகள் இருந்தால், உங்களுக்கு கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடியும் கிடைக்கும். கடைசியாக உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால், மாடல் மற்றும் அதன் தற்போதைய நிலையை பொறுத்து ரூ.22,800 வரை எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.2-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே
- எக்ஸினோஸ் 2400 சிப்செட்
- அட்வான்ஸ்டு AI அம்சங்களுடன், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 அப்டேட் விரைவில் வரும்
- OIS உடன் 50MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 10MP டெலிஃபோட்டோ கேமரா
- 12MP செல்ஃபி கேமரா
- 25W வயர்டு மற்றும் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 உடன் 4,000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் வழியாக லீக் ஆன விவரங்கள் ​​சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பில்ட் மெட்டீரியல் மற்றும் டிஸ்பிளே பற்றிய விவரங்களை வெளிப்படுத்தின. அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் அலாய் மிடில் ஃபிரேமை (Titanium alloy middle frame) கொண்டிருக்கும்.

அதாவது இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடலை போலவே இருக்கும் என்று அர்த்தம். இது உண்மையாகும் பட்சத்தில், எட்ஜ் மாடல் ஆனது கேலக்ஸி எஸ் சீரீஸில் டைட்டானியம் பாடியை கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் ஐசிப்ளூ, டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்பிளாக் ஆகிய 3 கலர்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 2கே ரெசல்யூஷன் வரும் என்றும் டிப்ஸ்டர் வெளிப்படுத்துகிறார். இது சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் காணப்படும் 3120 x 1440 பிக்சல்களை போலவே இருக்கும் என்றும், எஸ்25 மாடலில் உள்ள எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷனை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,13,660 முதல் ரூ.1,23,132 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,23,132 முதல் ரூ.1,32,603 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 gets Big Price Cut As Galaxy S25 Edge Launch Postponed to May 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X