Home
Mobile

விட்ராதீங்க சார்.. ரூ.25,100 விலை குறைப்பு.. 50MP கேமரா.. 4700mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதால், முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாதபடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 50 எம்பி கேமரா, 4700mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஓஐஎஸ் கேமரா கொண்ட இந்த கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வெளியானபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.65,999ஆகவும் இருந்தது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ரூ.25,000-க்கும் மேல் விலை குறைப்பில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

விட்ராதீங்க சார்.. ரூ.25,100 விலை குறைப்பு.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஆகவே, இப்போது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.34,899ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.43,855ஆகவும் இருக்கிறது. இதில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுக்கு மட்டும் ரூ.25,100 விலை குறைப்பு கிடைத்துள்ளது. இந்த விலையில் நேரடியாத ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் பிரீமியம் மாடலாக இருப்பதால், 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். அதேபோல 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கிடைக்கிறது.

அதேபோல மெட்டாலிங் பினிஷிங் ஃபிரேம் உள்ளது. டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. ப்ளூ (Blue), கிராஃபைட் (Graphite) மற்றும் மின்ட் (Mint) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, சிப்செட், கேமரா, பேட்டரி மற்றும் மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இதுவும் பிரீமியமாக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S24 FE Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன் யுஐ 6.1.1 (One UI 6.1.1) கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல இதில் 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். அதேபோல டெகா கோர் எக்ஸினோஸ் 2400இ 4என்எம் (Deca Core Exynos 2400e 4nm) சிப்செட் வருகிறது.

இதுவொரு இன்-ஹவுஸ் சிப்டெட் மாடலாகும். ஆகவே, கேலக்ஸி ஏஐ பீச்சர்களுக்கு ஏற்ப இது அவுட்புட் கொடுக்கும். இந்த சிப்செட்டுக்கு ஏற்ப எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த கேலக்ஸி ஏஐ பீச்சர்களில் போட்டோ அசிஸ்ட், ஸ்கெட்ச் டூ இமேஜ், சர்க்கிள் டூ சர்ச், லைவ் டிரான்ஸ்லேட் கிடைக்கின்றன.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். ஆகவே, டிஸ்பிளவில் பிரீமியம் அவுட்புட் கிடைக்கும்.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி, 3X ஆப்டிகல் ஜூம் கிடைக்கிறது. 10 எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஸ்லிம் பாடி மற்றும் காம்பாக்ட் மாடலாக இருப்பதால், 4700mAh பேட்டரி கொடுக்கிறது. 25W வயர்டு சார்ஜிங் உள்ளது. IP68 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 FE With 8GB RAM Gets Price Drop Ahead Of Galaxy S25 FE Launch Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X