சொல்லி அடிக்கும் Samsung.. 7 வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்.. 50MP கேமரா.. அறிமுகமானது புதிய 5ஜி போன்..
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. தரமன அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. அதேபோல் விரைவில் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S24 FE Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-O டைனமிக் அமோலெட் டிஸ்பிளே (Infinity-O Dynamic AMOLED Display) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

டெகா-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 2400இ 4என்எம் பிராசஸர் (Deca-Core Samsung Exynos 2400e 4nm processor) உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Samsung Xclipse 940 GPU) வசதியும் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன்.
One UI 6.1.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போன் 7 வருட ஆண்ட்ராய்டு ஓஸ் அப்டேட் மற்றும் 7 வருட பாதுகாப்பு அப்டேட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
ஜெனரேட்டிவ் எடிட் (Generative Edit), போர்ட்ரெய்ட் ஸ்டுடியோ (Portrait Studio), எடிட் சஜெஷன்ஸ் (Edit Suggestions) மற்றும் இன்ஸ்டன்ட் ஸ்லோ-மோ (Instant Slow-mo),சர்க்கிள் டு சர்ச் வித் கூகுள் (Circle to Search with Google), லைவ் டிரான்ஸ்லேட் (Live Translate) போன்ற அம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனில் உள்ளன.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளும் என்றே 10எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றம் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன் விற்பனைக்கு வரும். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display fingerprint scanner) வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 4700mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர் ஷேர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), 4ஜி வோல்ட்இ (4G VoLTE), வைஃபை 6இ 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6E 802.11ax), புளூடூத் 5.3(Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), யுஸ்பி 3.1 (USB 3.1), என்எப்சி (NFC), குளோனாஸ் (GLONASS) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனில் உள்ளன. கிராஃபைட் (Graphite), ப்ளூ (Blue), கிரே (Gray),மிண்ட் (Mint), எல்லோ (Yellow) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனின் விலை ரூ.54,355-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.59,370-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த போன் ஐரோப்பாவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் விரைவில் இந்தியாவிலும் இந்த போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








