Home
Mobile

இது வரட்டும்.. அப்புறம்தான் வேற.. OIS கேமரா.. 12GB ரேம்.. 4565mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆப்பிள் போன்களை தூக்கி சாப்பிடும்படியான கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், ஏஐ பீச்சர்களுடன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) மாடல்களுக்கு அடுத்தபடியாக கம்மி பட்ஜெட்டில் அவற்றின் பெரும்பாலான பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) வெளியாக இருக்கிறது. இந்த சாம்சங் மாடலின் டிசைன், கலர் மற்றும் பீச்சர்கள் மட்டுமல்லாமல் விலை விவரங்களும் மார்கெட்டில் வெளியாகி அதிரவிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S24 FE Specifications): இந்த சாம்சங் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus Plus) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே (Infinity-O Dynamic AMOLED) வருகிறது.

இது வரட்டும்.. அப்புறம்தான் வேற.. OIS கேமரா.. 12GB ரேம்.. எந்த போன்?

இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன் யுஐ 6.11 (One UI 6.1.1) கொண்ட ஆக்டா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400ஈ 4என்எம் (Octa-Core Samsung Exynos 2400e 4nm) சிப்செட் வருகிறது.

பிரீமியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும் சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Samsung Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனில் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன.

பிரீமியம் சாம்சங் மாடல்களில் வரும் டெலிபோட்டோவுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) வருகிறது.

அதேபோல டெலிபோட்டோவிலும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. இதுபோக 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 மாடல்களிலும் ஏஐ கேமரா பீச்சர்கள் இந்த போனிலும் வருகின்றன. 10 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,565mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர் ஷேரிங் சப்போர்ட் உள்ளது. இந்த கேலக்ஸி மாடலில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் உள்ளது. கிராஃபைட் (Graphite), ப்ளூ (Blue), சில்வர்/ஒயிட் (Silver/White), கிரீன் (Green) மற்றும் எல்லோ (Yellow) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ப்ரோமோ மெட்டீரியல் மூலம் கலர் மற்றும் டிசைன் உடன் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இருப்பினும், இதே அம்சங்களுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன் வெளியாக இருக்கிறது. ஆரம்ப விலை ரூ.54,486 பட்ஜெட்டில் இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. விற்பனையிலும் சக்கைப்போடு போட்டுள்ளது. இருப்பினும், கூடுதல் விலை காரணமாக சாம்சங் பிரியர்கள் விலை குறைப்பு அல்லது டிஸ்கவுண்ட்டுக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு இந்த மாடல் பக்கா தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

Image Source: Android Headlines

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 FE With 50MP Camera Expected To Launch October 2024 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X