Home
Mobile

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. 3X ஆப்டிகல் ஜூம்.. 4565mAh பேட்டரி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த புதிய போன் வரும் அக்டோபர் மாதம் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போன் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S24 FE specification): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்குனா இப்புடி ஒரு போன் வாங்கனும்..எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

50எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன். பின்பு 3X ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் கொண்டுள்ளது இந்த போன்.

One UI 6.1.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அதன்படி சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 2400இ (Exynos 2400e) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு கேலக்ஸி ஏஐ (AI) அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்குனா இப்புடி ஒரு போன் வாங்கனும்..எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

4565mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 FE will be launched in October:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X