அக்டோபர் அதிரும்.. சாம்சங் இறக்கும் Galaxy S24 FE.. இப்போ உறுதியாச்சு.. விட்டத புடிக்க பார்க்கும் பிரியர்கள்!
இந்திய மார்கெட்டில் நம்ப முடியாத ஏஐ பீச்சர்களுடன் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எஸ்24 மாடல்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றன. ஆனால், பட்ஜெட் பக்கா பிரீமியமாக இருந்ததால், காத்திருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இவர்களை தட்டித்தூக்கும் விதமாக அதே பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) கம்மி பட்ஜெட்டில் களமிறங்க இருக்கிறது. இப்போது, பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வந்திருப்பதால், இந்தியாவில் வெளியாவது உறுதியாகிவிட்டது. இதன் விலை, அம்சங்கள் குறித்து கசிந்த விவரங்களை பார்ப்போம்.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனின் குளோபல் வெளியீடு அக்டோபரில் நடக்க இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களும் வெளியாகி இந்திய சாம்சங் பிரியர்களை தட்டித்தூக்கியது. இருப்பினும், இந்தியாவில் வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வந்துபின் வருவது உறுதியாகிவிட்டது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 போன்களில் வந்த ஏஐ பீச்சர்கள் இந்த போனிலும் வருகிறது. அதே நேரத்தில் அந்த மாடல்களைவிட கம்மயான விலையிலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ வெளியாக வாய்ப்புள்ளது. ஆரம்ப விலை ரூ.54,486 பட்ஜெட்டில் இருக்கலாம் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பீச்சர்களுக்கு ஏற்ப வொர்த்தான பட்ஜெட்டாகவே இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S24 FE Specifications): இந்த சாம்சங் போனின் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், மார்கெட் வட்டாரங்களில் கசிந்துவிட்டன. அதேபோல டிசைன் மற்றும் கலர் விவரங்களும் வெளியாகிவிட்டன. ஆகவே, இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன் யுஐ 6.11 (One UI 6.1.1) வருகிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் அதற்கு மேலான அப்டேட் கொடுக்கப்படலாம். சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Samsung Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400ஈ 4என்எம் (Octa-Core Samsung Exynos 2400e 4nm) சிப்செட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் வருகின்றன.
இந்த எப்இ மாடலில் 6.7 இன்ச் இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே (Infinity-O Dynamic AMOLED) வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus Plus) புரொடெக்சன் வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி மற்றும் ஆட்டோபோகஸ் (Auto Focus) வருகிறது. 30X டிஜிட்டல் ஜூமிங் உள்ளது
மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் வருகிறது. 10 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர் ஷேரிங் சப்போர்ட் கொண்ட 4,565mAh பேட்டரி வருகிறது. மேலும், 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) மற்றும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் வருகிறது. இந்த இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனில் கிராஃபைட் (Graphite), ப்ளூ (Blue), சில்வர்/ஒயிட் (Silver/White), கிரீன் (Green) மற்றும் எல்லோ (Yellow) ஆகிய கலர்களில் இருக்கின்றன. குளோபல் வெளியீட்டின் போது இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.
Image Credits: Android Headlines


Click it and Unblock the Notifications








