வந்துட்டான் டா! பலரும் எதிர்பார்த்த 5G போன்! 6.1-இன்ச் டிஸ்பிளே, 12GB ரேம், 4500mAh பேட்டரி.. Samsung அசத்தல்!
சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் (5G Smartphone) கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ (Samsung Galaxy S24 FE) ஸ்மார்ட்போனை பற்றித்தான். சாம்சங்கின் கேலக்ஸி எஸ் சீரீஸ் (Galaxy S Series) ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத பயனர்கள் மத்தியில் இந்த "ஃபேன் எடிஷன்" (Fan Edition) ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலம்.

கேலக்ஸி எஸ்21 எஃப்இ (Galaxy S21 FE) மாடலுக்கு பின்னர் கேலக்ஸி எஸ்22 எஃப்இ (Galaxy S22 FE) மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக கேலக்ஸி எஸ்23 எஃப்இ (Galaxy S23 FE) மாடலும் அறிமுகம் செய்யப்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சாம்சங் கேலக்ஸி எஃப்இ ஸ்மார்ட்போன்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்த அபார வரவேற்பின் விளைவாக சாம்சன்ங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கேலக்ஸி எஸ்24 எஃப்இ என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்தியாவில் இது ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (தற்போது) ரூ.54,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போனில் 6.1-இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கலாம். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனின் "முன்னோடி" ஆன 6.4-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது; அதாவது புதிய மாடல் சற்றே சிறிய டிஸ்பிளேவை பேக் செய்யும் என்பது போல் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட்டில் எக்ஸிநோஸ் 2400 சிப்செட் (Exynos 2400 SoC) மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பெறலாம். இது 128ஜிபி மற்றும் 256ஜிபி UFS 3.1 ஆகிய இரண்டு இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் 12ஜிபி LPDDR5X ரேம் உடன் இணைக்கப்படலாம்.
கடைசியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ மாடலில் உள்ளதை போலவே 4500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். இதுதவிர்த்து கேமராக்கள், வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ எப்போது அறிமுகமாகும்? இது வருகிற ஜூலை மாதம் நடக்கவுள்ள கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் (Galaxy Unpacked Event) போது சாம்சங்கின் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படலாம் அல்லது 2024 அக்டோபரில்அறிமுகமாகி, அதன் பழைய எஃப்இ மாடலின் லான்ச் டைம்லைன் (Launch Timeline) உடன் ஒற்றுப்போகலாம்
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: கடந்த அக்டோபர் 2023-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் டைனமிக் FHD+ AMOLED 2X டிஸ்பி, இன்-ஹவுஸ் எக்ஸினோஸ் 2200 சிப்செட், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட், அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர் + 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, முன்பக்கத்தில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் மற்றும் 25W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 4,500mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








