Home
Mobile

வெயிட் பண்ணவங்க வயித்துல அடிச்ச Samsung.. ரூ.10,000 அதிக விலைக்கு வரும் அடுத்த போன்.. என்ன மாடல்?

Samsung Next Launch 2024: சாம்சங் நிறுவனத்தின் கீழ் ஏ-சீரிஸ், எம்-சீரிஸ், எப்-சீரிஸ், இஸட்-சீரிஸ் என பல வகையான சீரிஸ் இருந்தாலும் கூட, இந்நிறுவதின் எஸ்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஈடு எதுவுமே இல்லை எனலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் ஆப்பிள் ஐபோன்களை துவம்சம் செய்யும் நோக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்படும் கேலக்ஸி எஸ்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் ஐபோன்களை போலவே கேலக்ஸி எஸ்-சீரிஸ் மாடல்களும் அதிக விலை நிர்ணயம் கொண்டிருப்பதால்.. அனைவராலும் இதை வாங்க முடிவதில்லை.

இந்த சூழ்நிலையை சரிசெய்யும் நோக்கத்தின் கீழ் சாம்சங் நிறுவனம் "எப்இ" என்று சுருக்கமாக அழைக்கப்படும் "ஃபேன் எடிஷன்" ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கியது. அதாவது அதிக விலைக்கு கேலக்ஸி-எஸ் சீரீஸின் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் எப்இ வேரியண்ட்களை (FE Variants) சற்றே மலிவான விலைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியது.

Galaxy S24 FE: வெயிட் பண்ணவங்க வயித்துல அடிச்ச Samsung நிறுவனம்!

ஒரிஜினல் மாடலில் சில முக்கிய அம்சங்கள் எப்இ மாடலில் சேர்க்கப்படுவதாலும், ஒரிஜினல் மாடல்களை விட எப்இ மாடல்கள் மலிவாக இருப்பதாலும்.. எஸ்-சீரீஸ் மாடல்களுக்கு இருப்பதை போலவே, எப்இ மாடல்களுக்கும் ஒரு தனிரசிகர் பட்டாளம் உண்டு. அவர்கள் அனைவருமே ஆவலாக காத்திருப்பது சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் ஃபேன் எடிஷன் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காகத்தான்!

அப்படியாக, சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காக காத்திருப்பவர்களின் தலையில் இடியை இருக்கும்படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் விலைநிர்ணயம் குறித்த திடுக்கிடும் தகவல் லீக் ஆகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனின் ஐரோப்பிய விலை குறித்த அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ-ன் விலை நிர்ணயம் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடலை விட மிகவும் அதிகமாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறது. வின் ஃபியூச்சர் அறிக்கையின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் EUR 799 (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.74,100) க்கு அறிமுகப்படுத்தப்படலாம்.

அதாவது இது EUR 699 (தோராயமாக ரூ.64,800) க்கு பட்டியலிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப் ஸ்மார்ட்போனின் அதே ஸ்டோரேஜ் ஆப்ஷனை விட EUR 100 (தோராயமாக ரூ.9,200) அதிகமாகும். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது இதுவரை இரண்டு அதிகாரப்பூர்வ விலைகுறைப்புகளை பெற்று தற்போது ரூ.54,999 முதல் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிசைனை பொறுத்தவரை பெரும்பாலும் இது முந்தைய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போனின் வடிவமைப்பையே கொண்டிருக்கும். இந்த மாடலில் அலுமினியம் மிடில் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் பேனல் இருக்கலாம்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது எக்சினோஸ் 2400இ சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது 25W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4565mAh பேட்டரியை பேக் செய்யலாம். மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 10 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை பேக் செய்யலாம். கடைசியாக இது ப்ளூ, கிரீன், கிராஃபைட், சில்வர் / ஒயிட் மற்றும் யெல்லோ ஆகிய 5 கலர்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 FE More Expensive Than Galaxy S23 FE Look How Much Cost Difference
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X