Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. 50எம்பி கேமரா.. தரமான சிப்செட்.. வருகிறது புதிய Samsung 5G போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) ஸ்மார்ட்போன் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸ் மாடல்களை வரும் நாட்களில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. அதாவது இந்த புதிய சாம்சங் சாதனங்கள் வரும் செப்டம்பர் 26-ம் அறிமுகமாகும் என ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது.

ஆனால் சாம்சங் நிறுவனம் இந்த சாதனங்களில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடவில்லை. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது நாட்டில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான சாம்சங் கேல்கஸ் எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய Samsung 5G போன்..

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S24 FE specification): தரமான எக்ஸிநோஸ் 2400இ (Exynos 2400e) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். கேலக்ஸி ஏஐ (AI) அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் One UI 6.1.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 50எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன். அதேபோல 3X ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் கொண்டுள்ளது இந்த போன். 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

கொஞ்சம் பொறுங்க.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய Samsung 5G போன்..

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போன் 4565mAh பேட்டரி உடன் வெளிவரும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனாலும் இந்தியாவில் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 FE launch date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X