அடேங்கப்பா.. AI உடன் புது Samsung Mobile-ஆ? வேறெந்த போனும் வாங்காதீங்க.. என்ன மாடல்? என்ன விலை?
சாம்சங் (Samsung) நிறுவனம் இப்போது இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் வரிசையில் புதிய சேர்ப்பாக மற்றொரு மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் சாம்சங் கேலக்ஸி S24 எஃப்இ (Samsung Galaxy S24 FE) என்ற மாடல் பெயருடன் AI அம்சத்துடன் அட்டகாசமான அம்சங்கள் நிறைந்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் புக்கிங் இப்போது திறக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழுவிபரம் இதோ.
சாம்சங் கேலக்ஸி S24 FE சிறப்பம்சம் (Samsung Galaxy S24 FE specifications):
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி S24 எஃப்இ ஸ்மார்ட்போன் சாதனம் 6.7" இன்ச் அளவு கொண்ட FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவை (Display) வழங்குகிறது. இந்த டிஸ்பிளே 1900 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (Peak Brightness) உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) ஆதரவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்புடன் வருகிறது.

இந்த புதிய Samsung Galaxy S24 FE ஸ்மார்ட் போன் சாதனம் ஆண்ட்ராய்டு 14 உடன் ஒன்யூஐ 6.0 அடிப்படையிலான (OneUI 6.0 based on Android 14) இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 8GB ரேம் உடன் 256GB வரையிலான ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. இது சாம்சங் எக்சினோஸ் 2400e சிப்செட் (Samsung Exynos 2400e processor ) உடன் இயங்குகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி S24 FE மொபைல் சாதனம் ட்ரிபிள் ரியர் கேமராவை (Triple rear camera) கொண்டுள்ளது. இதில் 50MP மையின் வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 8MP டெலிபோட்டோ கேமரா போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 10MP செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 4700mAh பேட்டரி (Battery) உடன் வயர்டு மற்றும் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது டூயல் சிம் கார்டு (dual SIM card) இணைப்பு வசதியுடன் டூயல் இசிம் (dual eSIM) வசதியையும் வழங்குகிறது. இந்த சாதனம் சாம்சங் நிறுவனத்தின் AI அம்சத்துடன் ஒரு பவர்புல் சாதனமாக வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி S24 FE விலை (Samsung Galaxy S24 FE Price):
இது WiFi 6E, Bluetooth v5.3, NFC, NavIC போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த Samsung Galaxy S24 FE விலை பற்றி பேசுகையில், இதன் 8GB RAM + 128GB மாடல் மற்றும் 8GB RAM + 256GB மாடல் முறையே ரூ. 54,360 மற்றும் ரூ. 59,378 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ப்ரீபுக்கிங் இப்போது அமெரிக்காவில் துவங்கியுள்ளது.
அக்டோபர் 3, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ப்ளூ (Blue), கிராஃபைட் (Graphite), கிரேய் (Gray), மற்றும் மின்ட் (Mint) ஆகிய நிறங்களில் கிடைக்குமென்று அறிவித்துள்ளது. இந்திய சாம்சங் வலைப்பக்கத்தில் இப்போது இந்த சாதனம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








