ரூ.25,500 விலை குறைப்பு.. இந்த Samsung 5ஜி போனை கம்மி ரேட்ல வாங்க இதான் சரியான நேரம்!
சாம்சங் நிறுவனமானது கடந்த செப்.4 ஆம் தேதி நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ மாடலை உலகளாவில் அறிமுகம் செய்திருந்தது. புதிய மாடல் வந்த வேகத்தில் பழைய சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ மாடல் மீது அபாரமான விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 இ-காமர்ஸ் வலைத்தளங்களும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ மீது விலை குறைப்புகளை அறிவித்துள்ளன. ஆனால் பிளிப்கார்ட்டை விட அமேசான் இந்தியா தான் அதிக விலைகுறைப் பை அறிவித்துள்ளது.

தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, எம்ஆர்பி விலையான ரூ.59,999 க்கு பதிலாக ரூ.25,500 விலைக்குறைப்பை பெற்று ரூ.34,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது எந்த பேங்க் கார்டு அல்லது கூப்பன் டிஸக்வுண்டும் இல்லாத நேரடி விலை குறைப்பாகும்.
இதே மாடல் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது பிளிப்கார்ட் ஆனது அமேசான் இந்தியாவை விட ரூ.5500 அதிக விலைக்கு சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ ஸ்மார்ட்போனை விற்பனை செய்கிறது. ஆக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தை அணுகுவதே சிறந்தது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது ஸ்ட்ரீமிங் மற்றும் அன்றாட செயல்பாடுகளை சீராக செய்கிறது.
சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட எக்சினோஸ் 2400இ சிப்செட்டை (Exynos 2400e Chipset) கொண்டு உள்ளது. நல்ல பெர்பார்மென்ஸை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது போர்ட்ரெய்ட் படங்களுக்கான 50 எம்பி மெயின், 12 எம்பி அல்ட்ராவைடு மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு, இந்த ஸ்மார்ட்போன் 10 எம்பி செல்பீ கேமராவுடன் வருகிறது. கடைசியாக இது 4,700mAh பேட்டரி மற்றும் 25W சார்ஜிங்கையும் வழங்குகிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.57,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.62,570 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்திய விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐசிப்ளூ, ஜெட்பிளாக், நேவி மற்றும் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வருகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1,900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- விஷன் பூஸ்டர் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ ப்ரொடெக்ஷன்
- 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட எக்சினோஸ் 2400 சிப்செட்
- Android 16-அடிப்படையிலான One UI 8 ஓஎஸ்
- ஏழு ஆண்டு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ப்ரைமரி சென்சார்
- 8-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ்
- முன்பக்கத்தில் 12-மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 4,900mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 7.4 மிமீ
- எடையில் 190 கிராம்.


Click it and Unblock the Notifications








