Home
Mobile

மிரளுது ஆஃபர்.. ரூ.30,000 விலை கம்மி.. அடிமட்ட ரேட்ல SAMSUNG போன்.. OIS கேமரா.. 4000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பிரீமியம் மாடல்களாக வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) போன்களுக்கு இப்போது நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.30,000 நேரடி விலை குறைப்பில் கிடைப்பதால், சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களும் அறக்க பறக்க ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த விலை குறைப்பு மார்கெட் விலையில் இருந்து குறைக்கப்பட்டுள்ளதால், பேங்க் கார்டுகள் இல்லாமலேயே மலிவாக வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 விலை (Samsung Galaxy S24 Price): இந்த போனின் மார்கெட் விலையை பொறுத்தவரையில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.89,999ஆக இருக்கிறது.

மிரளுது ஆஃபர்.. ரூ.30,000 விலை கம்மி.. அடிமட்ட ரேட்ல SAMSUNG போன்!

இப்போது, 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.30,000 விலை குறைப்பு போக ரூ.44,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி + 256 ஜபி வேரியண்ட் ரூ.29,000 விலை குறைப்பு போக ரூ.50,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் ரூ.27,000 விலை குறைப்பு போக ரூ.62,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ.30,000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ விலை (Samsung Galaxy S24 FE Price): இந்த போனின் மார்கெட் விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.65,999ஆகவும் இருக்கிறது. இப்போது, 128 ஜிபி மாடலுக்கு ரூ.25,000 விலை குறைப்பும், 256 ஜிபி மாடலுக்கு ரூ.25,000 விலை குறைப்பு கிடைக்கிறது.

ஆகவே, 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டை ரூ.34,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டை ரூ.40,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த விலைகளில் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த கேலக்ஸி எஸ்24 மாடல்களில் பிரீமியம் செண்மெண்ட்டில் வெளியாகி இருப்பதால், பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுக்கும்படி இருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அம்சங்கள் (Samsung Galaxy S24 Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட், அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு கொண்ட 6.2 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.

ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி கேமரா அல்ட்ரா வைடு கேமரா + 3X ஆப்டிகல் ஜூமிங் கொண்ட 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் IP68 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 4000mAh பேட்டரி மற்றும் 25W சார்ஜிங் கிடைக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S24 FE Specifications): டெகா கோர் எக்ஸினோஸ் 2400இ 4என்எம் (Deca Core Exynos 2400e 4nm) சிப்செட், சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Samsung Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்கிறது. 6.7 இன்ச் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு கிடைக்கிறது.

ஓஐஎஸ் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 3X ஆப்டிகல் ஜூமிங் கொண்ட 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 10 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 25W சார்ஜிங் மற்றும் 4,700mA பேட்டரி கிடைக்கிறது. கேலக்ஸி ஏஐ பீச்சர்கள் இந்த மாடல்களில் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 And Galaxy S24 FE Gets Discount in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X