வச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.26,000 விலை குறைப்பு.. நினைக்காத ரேட்ல சாம்சங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான விலை குறைப்பில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) போன் கிடைக்கிறது. கனவிலும் நினைக்காதபடி ரூ.26,000 விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அமேசான் விற்பனை (Samsung Galaxy S23 Amazon Sale): இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 74,999ஆக இருந்தது. இந்திய மார்கெட்டில் இந்த விலைக்கு வெளியாகியது. ஆனால், இப்போது அமேசான் விற்பனையில் நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.48,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

இது ரூ.26,000 விலை குறைப்பு சலுகையாகும். இதுபோக அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,740 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.2,250 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ரூ.43,650 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அம்சங்கள் (Samsung Galaxy S23 Specifications): இந்த பிரீமியம் சாம்சங் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட 6.1 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டைனாமிக் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1750 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. ஓஎஸ் மட்டும் கொஞ்சம் டிராவ்பேக்காக இருக்கிறது. அதாவது, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் இருக்கிறது.
கேலக்ஸி ஏஐ (Galaxy AI) சப்போர்ட் கொண்ட ஒன் யுஐ 5.1 (One UI 5.1) கிடைக்கிறது. அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Octa Core 4nm Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் கிடைக்கிறது. கேலக்ஸி ஏஐ பீச்சர்களில் சர்க்கிள் டூ சர்ச்ச், ஜெமினி, ஏஐ எரைசர் போன்றவை கிடைக்கின்றன.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் 8K வீடியோ ஷூட் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது.
30X ஸ்பேஸ் ஜூமிங், ஏஐ ஆப்ஜெக்ட் அவேர் என்ஜின், ஏஐ ஸ்டீரியோ டெப்த் மேப், ஏஐ ஐஎஸ்பி அல்கோரிதம் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 3900mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேரிங் சப்போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








