ஓஹோ இப்படி தான் வருமா Samsung Galaxy S23 ஸ்மார்ட்போன்? தாராளமா வெயிட் பண்றோம்!

|

Samsung நிறுவனம் அறிமுகம் செய்யும் கேல்கஸ் எஸ் தொடர் ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon சிப்செட் உடன் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

Qualcomm இன் CFO, ஆகாஷ் பல்கிவாலா சமீபத்தில் பங்கேற்ற மூதலீட்டாளர்கள் மாநாட்டில், 2023 இல் வெளியாகும் கேலக்ஸி எஸ்23 ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினார். அதேபோல் Qualcomm இன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ்டியானோ அமோன், வரவிருக்கும் Samsung Galaxy S23 தொடர் உலகளவில் Snapdragon சிப்செட்களைப் பயன்படுத்தக்கூடும் என்பதை சுட்டிக்காட்டினார்.

பிப்ரவரி 2023

பிப்ரவரி 2023

மறுபுறம் சாம்சங் அதன் Galaxy S23 தொடருக்கான புதிய Exynos 2300 சிப்செட்டில் வேலை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளியாகும் என கூறப்படும் இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2023 இல் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.

200 மெகாபிக்சல் கேமரா

200 மெகாபிக்சல் கேமரா

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்23 தொடரின் அடிப்படை வேரியண்ட் ஆக கேலக்ஸி எஸ்23 மற்றும் உயர்நிலை வேரியண்ட் ஆக கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதுவரை சாம்சங் ஸ்மார்ட்போனில் பார்த்திராத அதிக மெகாபிக்சல் கேமரா இதில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 200 மெகாபிக்சல் கேமரா உடன் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

சாம்சங் நிறுவனம் முன்னதாக அறிமுகமான கேலக்ஸி எஸ்22 தொடரில் எஸ்22 அல்ட்ரா மாடல் ப்ரீமியம் மாடல் ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேம்பட்ட அம்சங்கள் உறுதி

மேம்பட்ட அம்சங்கள் உறுதி

சாம்சங் மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்களில் இருந்து வெளியாகும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களும் இதே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்பட்டது. சுமார் ரூ.1 லட்சம் விலைப்பிரிவில் இருந்த ஸ்மார்ட்போனில் கூட இதே சிப்செட் தான் இருந்தது. இந்த நிலையில் இதைவிட மேம்பட்ட சிப்செட் ஆக அறிமுகமாகும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

போல்டபிள் மற்றும் ஃப்ளிப்

போல்டபிள் மற்றும் ஃப்ளிப்

ப்ரீமியம் ரகப் பிரிவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் சாம்சங்.

ரொம்ப வருஷமா ஸ்மார்ட்போன் யூஸ் பண்றோம். புதுப்புது அம்சங்கள் வருதே தவிர வடிவமைப்பு அப்படியே தானப்பா இருக்கு ஒரு மாற்றமும் இல்லையே. சதுரமான தோற்றம் முன்னாடி டிஸ்ப்ளே, பின்னாடி கேமரா கம்பெனி பெயர் மட்டும் வேறவேற. அம்சங்கள் மாறுதே தவிர வடிவமைப்பு அப்படியேதான் இருக்கு என்று சிந்திக்கும் மக்களின் குறைகளை தீர்க்க அறிமுகமான ஸ்மார்போன்கள் தான் போல்டபிள் மற்றும் ஃப்ளிப் மாடல்கள் ஆகும்.

தள்ளுபடியுடன் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்

தள்ளுபடியுடன் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்

ஃபோல்டபிள் மாடலை டிஸ்ப்ளே உடன் அப்படியே புத்தகம் போல் மடிக்கலாம். ஃப்ளிப் மாடலை அப்படியே மேல் இருந்து கீழ் புறத்தில் டிஸ்ப்ளே உடன் மடிக்கலாம். பல்வேறு நிறுவனங்களும் ஃபோல்டபிள் மாடல்களை அறிமுகம் செய்து வந்தாலும் இந்த பிரிவில் மிகவும் புகழ் பெற்றது சாம்சங் தான்.

சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் மாடல்கள் சுமார் ரூ.1 லட்சம் விலைப் பிரிவில் அறிமுகமானது. உச்ச விலை அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களிலும் வெவ்வேறு வகையிலான தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

File images

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 Smartphones important Specs Leaked: Shall you Wait For this?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X