விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Samsung கேலக்ஸி எஸ்23 போன்: என்னென்ன அம்சங்கள்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கேலக்ஸி எஸ்23
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்23 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த புதிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம். அதாவது கேலக்ஸி எஸ்23 போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை
இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

50எம்பி மெயின் சென்சார்
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +10எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வெளிவரும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

3900 எம்ஏஎச் பேட்டரி
8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், எக்ஸிநோஸ் 2300 சிப்செட், 3900 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் இந்த கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
சாம்சங் நிறுவனம்.
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ04எஸ்
Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.
கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

எக்ஸிநோஸ் 850 சிப்செட்
ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன். எனவே இது இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்தகேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா
50எம்பி பிரைமரி கேமரா (f/1.8) + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெய்ட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன். பின்பு செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications