கேட்டாலே தலைச்சுற்றும் விலை.. 6.4-இன்ச் டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது சாம்சங் இந்தியா இணையதளத்தில் இந்த கேலக்ஸி எஸ்23 எப்இ போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவரும்.

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட் (Snapdragon 8 Gen 1 chipset) வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி சென்சார் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு இந்த போன் டால்பி ஆடியோ வசதியுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவரும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்தியச் சந்தையில் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.54,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








