தாறுமாறான போன்.. 50எம்பி கேமரா.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. வருகிறது சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தரமான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதாவது இந்நிறுவனம் அறிமுகம் 5ஜி போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதம் ஒரு அட்டகாசமான 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம்.
அதாவது சாம்சங் நிறுவனம் வரும அக்டோபர் 4-ம் தேதி புதிய கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இந்த போனின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா, தரமான சிப்செட் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். ஏற்கனவே வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட் (Snapdragon 8 Gen 1 chipset) வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி சென்சார் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு இந்த போன் டால்பி ஆடியோ வசதியுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவரும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன். அதேபோல் குறைந்த எடையில் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நம்பி வாங்கலாம்.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ரூ.54,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டியாக இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








