Home
Mobile

ஆட்டமே வேற.. ஆப்பிளுக்கு டஃப்பான சாம்சங்.. OIS கேமரா.. 3X ஜூமிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆப்பிள் போன்களை தூக்கிசாப்பிடும் டிசைன், OIS கேமரா, 3X ஆப்டிகல் ஜூமிங், 4500mAh பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பிரீமியம் அம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கும், சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனின் பல்வேறு அம்சங்கள் கசிந்து விட்டன. இந்த அம்சங்களுடன் இந்த போனின் விலை எவ்வளவு இருக்கும்? எப்போது வெளியாகும் உள்ளிட்ட விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆட்டமே வேற.. வெறித்தனமான சாம்சங்.. OIS கேமரா.. 3X ஜூமிங்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S23 FE Specifications): இந்த சாம்சங் போன் 6.3 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு இன்பினிட்டி-ஓ டைனாமிக் (Infinity-O Dynamic) டிஸ்பிளே மாடலாகும். இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இந்த சாம்சங் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஒன் யுஐ 5 ஓஎஸ் (One UI 5 OS) கொண்ட ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 4என்எம் (Octa-Core Qualcomm Snapdragon 8 Gen 1 4nm) சிப்செட் வருகிறது.

அதே போல ஆக்டா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2200 (Octa-Core Samsung Exynos 2200) சிப்செட் வரவும் வாய்ப்புள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் இருக்கிறது. இந்த போனின் கேமரா டிரிபிள் ரியர் செட்டப் கொண்டுள்ளது.

ஆகவே, 50 எம்பி (OIS) மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா +8 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 10 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த சாம்சங் போன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.

இதில் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Wired Fast Charging) கொண்ட 4500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) மற்றும் வயர்லெஸ் பவர் ஷேரிங் (Wireless Power Share) சப்போர்ட் வருகிறது. இவ்வளவு கம்மியான பேட்டரி கொடுக்கப்பட்டும், 210 கிராம் எடை கொண்டுள்ளது.

மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-Display Fingerprint Scanner), டைப் - சி ஆடியோ (Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. அதோடு டூயல் நானோ சிம் கார்ட் போர்ட் (Dual Nano SIM Card Port) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) வை-பை (Wi-Fi 6), யுஎஸ்பி 3.1 (USB 3.1), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன. இந்த போன் பிளாக் (Black) மற்றும் வைட் (White) ஆகிய 2 கலர்களை கொண்டிருக்கிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 54,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 59,999ஆகவும் நிர்யணம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த போனின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.

ஆகவே, இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் போன் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்த போனின் விலை பார்த்தால் மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு ஏத்ததாக இருக்காது. இருப்பினும், டிசைன் மற்றும் கேமரா அம்சங்கள் மிகவும் பிரீமியமாக கொடுக்கப்பட்டிருப்பதால் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

(Image Source: SmartPrix)

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 FE Tipped 8GB RAM, Snapdragon 8 Gen 1 Expected Specifications, Price, Launch Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X