யாரு விடுவா? 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. புதிய நிறங்கள்.. அறிமுகமானது சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்பெஷல் எடிஷனை (Samsung Galaxy S23 FE Special Edition) அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது இந்த போன் இரண்டு புதிய நிறங்களில் வெளிவந்துள்ளது. இதுதவிர சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனுக்கு சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்பெஷல் எடிஷன் ஆனது டேன்ஜரின் (Tangerine) மற்றும் இண்டிகோ (Indigo) நிறங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனித்துவமான நிறங்கள் மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனின் விலை ரூ.59,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.64,999-ஆக உள்ளது. சாம்சங் இணையதளத்தில் இந்த போனை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாம்சங் இணையதளத்தில் நடைபெறும் Fab Grab Offerஎனும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்பெஷல் எடிஷன்-ஐ தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.10,000 வரை தள்ளுபடி பெறமுடியும். இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 2200 (Exynos 2200)சிப்செட் உடன் Xclipse 920 GPU வசதி உள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த அட்டகாசமான சிப்செட்.
6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போன் வெளிவந்துள்ளது.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி சென்சார் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் Wi-Fi, GPS, NFC மற்றும் ப்ளூடூத் 5.3 இணைப்புகளையும் ஆதரிக்கிறது. டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூப் IP68 சான்றிதழ் உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








