அக்டோபர் 4.. 6.4-இன்ச் டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் போன் முதலில் உலக சந்தை அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த போனின் அறிமுக தேதி குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது சாம்சங் அர்ஜென்டினா இணையதளத்தில் இந்த கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி போனின் அறிமுக தேதி கசிந்துள்ளது. அதன்படி இந்த போன் வரும் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கூகுள் பிக்சல் 8 சரீஸ் போன்களுக்கு போட்டியாக இந்த கேலக்ஸி ஏஸ்23 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவர இருக்கிறது.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி போனுடன் புதிய சாம்சங் டேப்லெட் மற்றும் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 2200 (Exynos 2200) சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 (Snapdragon 8 Gen 1) சிப்செட் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி சென்சார் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த போன் டால்பி ஆடியோ வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவரும். ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போன்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன்.
கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ரூ.54,999 விலையில் இந்த அசத்தலான கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








