Home
Mobile

அமேசானில் யோசிக்காம வாங்குவீங்க.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. மிரட்டும் சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியச் சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய போனின் டீசரை சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி போன் அமேசான் (Amazon) வழியாக விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வர இருக்கிறது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இதன் விலை கூட சற்று உயர்வாக இருக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த சாம்சங் போனில் இருக்கும். இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

 AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. மிரட்டும் சாம்சங் போன்..எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 2200 (Exynos 2200) சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 (Snapdragon 8 Gen 1) சிப்செட் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி சென்சார் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த போன் டால்பி ஆடியோ வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவரும்.

 AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. மிரட்டும் சாம்சங் போன்..எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ ஸ்மார்ட்போன்.

கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ரூ.54,999 விலையில் இந்த அசத்தலான கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 FE 5G confirmed to go on sale via Amazon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X